திரும்ப திரும்ப ஒரே தவறை செய்த திரிமன்னே-சச்சின் தயவால் தப்பினார்!

புதன்கிழமை, பிப்ரவரி 22, 2012, 14:10 [IST]
Ahwin did a Mankad But Sachin Played A Gentleman Play
பிரிஸ்பேன்: முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில், இலங்கை வீரர் லஹிரு திரிமன்னே பந்துவீச்சாளர் பந்தை கையில் இருந்து விடுபடும் முன் பலமுறை கிரீஸைத் தாண்டினார். இதனால் கடுப்பான பந்து வீச்சாளர் அஸ்வின், ரன் அவுட் செய்தார். ஆனால் சச்சினின் கோரிக்கை மூலம், அவுட்டாகாமல் தப்பினார்.

இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது. இதில் நேற்று இந்தியா, இலங்கை அணிகள் மோதின. இதில் இலங்கை 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் விக்கெட்கள் அடுத்தடுத்து சரிய, திரிமன்னே பேட்டிங் செய்த களமிறங்கினார். இவர் ஒழுங்காக கிரீஸுக்குள் இருக்காமல் அவசரம் அவசரமாக ஓடி ரன் எடுப்பதிலேயே கவனமாக இருந்தார்.

போட்டியின் 39வது ஓவரை அஸ்வின் வீசினார். அப்போது பந்துவீச்சாளர் பந்தை கையில் இருந்து விடுவிக்கப்படும் முன், கிரீஸை விட்டு வெகு தூரத்திற்கு வந்து விட்ட திரிமன்னே ரன்னுக்காக ஓட ஆரம்பித்தார். இதே தவறை திரிமன்னே தொடர்ந்து செய்ததால், அதே ஓவரின் 3வது பந்தில் அஸ்வின், ஆடுகளத்தின் கோட்டை தாண்டி சென்ற திரிமன்னேவை ரன்-அவுட் செய்து அம்பயரிடம் ரன் அவுட் அப்பீல் கோரினார்.

இதனால் குழம்பிப் போன நடுவர்கள் 3வது நடுவரின் உதவியை நாடினர். அப்போது கேப்டன் ஷேவாக்கிடம் விரைந்து வந்த சச்சின் டெண்டுல்கர், இந்த அப்பீலை வலியுறுத்த வேண்டாம்,திரும்பப் பெறலாம் என்று யோசனை கூறினார். இதையடுத்து தனது அப்பீலை இந்தியா திரும்பப் பெற்றது. இதனால் திரிமன்னே மீண்டும் விளையாட அனுமதிக்கப்பட்டார். அதற்குப் பிறகும் கூட அவர் சரிப்பட்டு வரவில்லை.

ரன் அவுட் அபாயத்திலிருந்து தப்பிய பிறகு 62 ரன்களை குவித்த திரிமன்னே, பலமுறை அதே தவறை மீண்டும் செய்து கொண்டே இருந்தார்.

கிரிக்கெட் விதிமுறைகளின்படி, பந்துவீச்சாளரின் கையில் இருந்து பந்து வெளியேறிய பிறகு தான், எதிர்முனையில் உள்ள பேட்ஸ்மேன் ரன் எடுக்க ஓட வேண்டும். அதற்கு முன் எதிர்முனையில் உள்ள பேட்ஸ்மேன் ரன் எடுக்க ஓடி அவுட் செய்யப்பட்டால், அது ரன் அவுட்டாக கருதப்படும்.

நேற்று எந்த அஸ்வினால் ரன் அவுட் சிக்கலில் மாட்டி தப்பினாரோ அதே அஸ்வின் பந்தில்தான் திரிமன்னே பின்னர் அவுட்டானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது முதல் முறையல்ல:

இந்த மாதிரி வீரர் ஒருவர் அவுட் ஆவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு, கடந்த 1947ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா சுற்றுப்பயணம் சென்றது. அப்போது இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியின் போது இப்படி அவசரக் குடுக்கையாக செயல்பட்ட ஆஸ்திரேலியா வீரர் பில் பிரவுனை இந்திய வீரர் மங்கட் அவுட் செய்தார். அம்பயரும் அவுட் கொடுத்து விட்டார்.

இதை அப்போது ஆஸ்திரேலிய மீடியாக்கள் கடுமையாக விமர்சித்தன என்பது நினைவிருக்கலாம்.
English summary
Indian master batsman Sachin played a gentlemen's game against Srilanka in the Tri-series. He asked India's stand in skipper Virender Sehwag to withdraw a run-out appeal against Sri Lanka batsman Lahiru Thirimanne during the 8th ODI of the tri-series in Brisbane.
User Comments
[ கருத்தை எழுதுங்கள் ]
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST