டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியில் மூத்த வீரர்களின் அதிருப்தி உள்ளிட்ட பல சிக்கல்களால் தவித்து வரும் கேப்டன் டோணிக்கு, அவரது மனைவி ஆறுதல் கூறி ட்விட்டர் இணையதளத்தில் கருத்து வெளியி்ட்டுள்ளார்.
இந்திய அணி்க்கு 2வது முறையாக உலக கோப்பை பெற்று தந்தவர் என்ற புகழ் பெற்றவர் கேப்டன் டோணி. இதன்மூலம் இவருக்கு எண்ணற்ற ரசிகர்களும், வீரர்களின் ஆதரவும் இருந்தது.
ஆனால் இன்று டோணிக்கு எதிரான அலை பலமாக வீசத் தொடங்கியுள்ளது. குறிப்பாக டோணி அறிமுகப்படுத்திய சுழற்சி முறையிலான வாய்ப்பு முறைக்கு, அணியில் உள்ள மூத்த வீரர்கள் இடையே கடும் அதிருப்தி நிலவுகின்றது.
ஏற்கனவே டோணியின் சுழற்சி முறைக்கு பல முன்னாள் இந்திய வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது அணியில் உள்ள வீரர்கள் இடையேயும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது, டோணியை கவலை அடைய வைத்துள்ளது. மேலும் நேற்று இலங்கைக்கு எதிரான போட்டியில் தடை பெற்று, பங்கேற்க முடியாமல் போனதால் டோணி மேலும் சோர்வடைந்து உள்ளார்.
இந்த நிலையில் உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கின்றோம் என்று டோணியின் மனைவி சாக்ஷி ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
உங்களை யாரெல்லாம் கீழே இழுத்து தள்ள நினைத்தாலும் கவலைப்பட வேண்டாம். அதனை ஒரு பொருட்டாக எண்ணவும் வேண்டாம். நாங்கள் உங்களுக்கு ஆதரவாக எப்போதும் உள்ளோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நேரம் வரும் போது அவர்கள் தானாக விலகி போவார்கள் என்று தெரிவித்துள்ளார்.