சச்சின் ஓய்வை அறிவிக்க வேண்டும் - முன்னாள் இந்திய வீரர்கள் கருத்து

புதன்கிழமை, பிப்ரவரி 22, 2012, 17:46 [IST]
Sachin Tendulkar
டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தனது ஓய்வை விரைவில் அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக விளையாடி வருபவர் சச்சின் டெண்டுல்கர். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் யாரும் நெருங்க முடியாத சாதனைகளின் உச்சியில் இருப்பவர். ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் இடம் பெற்ற சச்சின், அங்கு சொல்லி கொள்ளும் அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை.

இதனால் முன்னாள் இந்தியா கிரிக்கெட் வீரர்கள் பலரும், சச்சினை ஓய்வு பெறுமாறு அறிவுறுத்த ஆரம்பித்துள்ளனர். இதில் முதல் நபராக முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ், சச்சின் கடந்த உலக கோப்பை தொடருடன் ஓய்வு பெற்றிருக்கலாம் என்று கருத்து தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து சச்சின் குருவான முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரும், செளரவ் கங்குலியும், அதே கருத்தை ஆமோதித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியதாவது,

எதிர்கால இந்திய அணியில் சச்சின் இடம் பெறமாட்டார் என்பது நிச்சயம். இதனால் சச்சினிடம் ஓய்வு பெறுமாறு, அணித் தேர்வாளர்கள் எடுத்து கூறலாம். சச்சினை தனியாக அழைத்து இது குறித்து பேச வேண்டும். அதன்மூலம் அவரே தனது ஓய்வை அறிவிக்க வழிவகை செய்ய வேண்டும்.

இது குறித்து சச்சினிடம் பேசுவதற்கு ஸ்ரீகாந்த் தான் தகுந்த நபர் என்று கருதுகின்றேன். ஏனெனில் சச்சின் இந்திய அணியில் அறிமுகமான போது, ஸ்ரீகாந்த் தான் கேப்டனாக இருந்தார். தற்போது அவர் அணித் தேர்வுக் குழுவின் தலைவராக உள்ளதால், சச்சினிடம் ஓய்வு குறித்து பேசலாம் என்றார்.

இது குறித்து இந்திய முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி கூறியதாவது,

ஒருநாள் தொடர்களில் சச்சின் வருவதும், போவதுமாக உள்ளார். இதனால் இந்திய அணியில் உள்ள மற்ற வீரர்களின் திறன் பாதிக்கப்படுகின்றது. ஒருநாள் போட்டிகளில் அவரால் தொடர்ந்து ஆட முடியுமா என்று கேட்க வேண்டும்.

அதற்கு அவரால் பதில் அளிக்க முடியாதபட்சத்தில், ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு பெற்று கொள்ள வேண்டும். இது குறித்து சச்சினே சொந்தமாக ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். சச்சினை போல இந்திய கிரிக்கெட் அணிக்கு அதிக பங்கு ஆற்றியவர் யாரும் இல்லை. எனவே அணியின் தேர்வாளர்களுக்கு கூட, சச்சினை ஓய்வுப் பெற கூற அதிகாரம் இருப்பதாக தெரியவில்லை என்றார்.
English summary
Former India captain Sourav Ganguly has backed Kapil Dev and has said Sachin Tendulkar should think about the limited overs format and take a call if he's still good enough to play in the ODIs.
User Comments
dinesh 24 Feb 2012 06:34 am
sachin is a cricket god....how did gavaskar say...
VASANTH 23 Feb 2012 04:57 pm
Dont put too much pressure on Sachin. no one shines at australia series, NOBODY is fit to talk about him & its none of our business.. LET HIM PLAY IN HIS WAY.
davidamalraj 23 Feb 2012 04:14 pm
sachin is a peak of an Indian cricket. he made different records in world cricket Now he met recession only is not permanent. I think sachin soon recovered. sachin can get counselling from experts. He may physical and mentally improve his strength.
bala 23 Feb 2012 12:57 pm
sachin is a greatest player in all time but some times bad luck for every man so sachin conform ly achive in 100 century so aviod this mater.........
bala 23 Feb 2012 12:47 pm
sachin is a greatest batsman and always younger every mans sometimes make some mistaks so this time bad time for sachin sachin becomes conformed achive in 100 century...............by greatest fan bala............
Arafath 23 Feb 2012 11:23 am
ellarum sachin mela poramaile solluranga
ramsankar 23 Feb 2012 10:42 am
sachin idharku munbu idhu pola palamurai thanadhu FORM ilandhu thaviththirukiraar. appodhellam avaradhu aattam vimarsikka pattadhu. yellaa vimarsanangalukkum sila naatkalileyae thanadhu BAT moolam badhil sonnaar Sachin. vimarsanam panniyavargal vaayadaithu ponaargal. ippodhum adhae pol thaan nadakum. thannudaya aatam kuriththa yendha vimarsanangalukkum thanadhu sirappaana aatathin moolamae sachin badhil solluvaar. sachin thaanaaga virumbinaal mattumae oivu pera vendum...
Gowtham 23 Feb 2012 01:20 am
Cricket dies, after the moment sachin quits.
gokul 22 Feb 2012 09:46 pm
sachin best playar in all day
Saravanan 22 Feb 2012 08:47 pm
Time to Quit
[ கருத்தை எழுதுங்கள் ]
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST