பிரிஸ்பேன்: இந்திய அணியில் இளம்வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதாக கூறிவிட்டு, தற்போது மூத்த வீரர்கள் பீல்டிங்கில் மந்தமாக செயல்படுவதாக கேப்டன் டோணி கூறுவது சரியில்லை என்று இந்திய துவக்க ஆட்டக்காரர் ஷேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே டோணிக்கும், ஷேவாக்குக்கும் இடையே பணிப்போர் நடந்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் டோணியின் சுழற்சி முறைக்கு ஷேவாக் அதிருப்தி தெரிவித்துள்ளது விரிசலை மேலும் அதிகரித்து வரும் போட்டிகளில் இந்தியாவுக்குப் பெரும் பாதகத்தை ஏற்படுத்தும் வாய்ப்பைப் பிரகாசப்படுத்தியுள்ளது.
இந்திய அணியில் உள்ள இளம்வீரர்களுக்கு வாய்ப்பு தரும் வகையில், மூத்த வீரர்களுக்கு சுழற்சி முறையில் விளையாடும் முறையை கேப்டன் டோணி அறிமுகப்படுத்தினார். இதன்படி அணியில் உள்ள கம்பிர், ஷேவாக், சச்சின் ஆகியோருக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இது மூத்த வீரர்களின் அதிருப்தியையும், கண்டனத்தையும் சம்பாதித்தது. காரணம், சுழற்சி என்ற பேரில் சச்சினையும் உட்கார வைத்து விட்டாரே டோணி என்பதுதான் காரணம். இத்தனைக்கும் சச்சின் இந்தத் தொடரில் இதுவரை பெரிய அளவில் விளையாடவில்லை என்பது வேறு விஷயம்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கு பிறகு பத்தரிக்கையாளர்கள் சந்திப்பின் போது பேசிய டோணி, மூத்த வீரர்கள் பீல்டிங்கில் மந்தமாக செயல்படுவதால், சுழற்சி முறை அறிமுகப்படுத்தியதாக தெரிவித்தார்.
இதனால் மூத்த வீரர்களான சச்சின், ஷேவாக், கம்பிர் ஆகியோர் அதிருப்தி அடைந்துள்ளனர். நேற்று இலங்கைக்கு எதிரான போட்டியில், டோணி கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது. இதனால் கேப்டனாக பொறுப்பு வகித்த ஷேவாக், டோணியின் சுழற்சி முறையை பின்பற்றாமல், 3 மூத்த வீரர்களும் போட்டியில் கலந்து கொள்ள அனுமதித்தார். (இந்த மூன்று பேருமே 55 ரன் சேர்ப்பதற்குள் அவுட்டாகிப் போய் விட்டனர். இவர்களில் அதிகபட்சமாக சச்சின் மட்டும் 29 ரன்கள் சேர்த்தார். ஷேவாக் முட்டை போட்டார், கம்பிர் 22 ரன்கள் எடுத்தார்.)
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஷேவாக், டோணியை கடுமையாக விமர்சித்தார்.
அவர் கூறுகையில்,
ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள அடுத்த உலக கோப்பை தொடருக்கு இளம் வீரர்களை தயார் செய்யும் வகையில், இந்திய அணியில் உள்ள மூத்த வீரர்களுக்கு சுழற்சி முறை அறிமுகப்படுத்தப்படுவதாக டோணி எங்களிடம் அறிவித்து இருந்தார்.
ஆனால் மூத்த வீரர்கள் பீல்டிங்கில் மந்தமாக செயல்படுவதாக அவர் எங்களிடம் கூறியதே இல்லை. டோணி மீடியாவில் அப்படி கூறியது ஏன் என்று தெரியவில்லை. அவர் மீடியாவில் கூறியதன் கருத்தும் எனக்கு புரியவில்லை.
நேற்று இலங்கைக்கு எதிரான போட்டியில் நான் எப்படி கேட்ச் பிடித்தேன் என்பதை பார்த்தீர்களா? இதேபோல தான் கடந்த 10 பத்து ஆண்டுகளாக பீல்டிங் செய்து வருகின்றேன். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மூத்த வீரர்களின் பீல்டிங்கில் 20 ரன்கள் தவறியதாக டோணி கூறுவது ஏன் என்று தெரியவில்லை.
டோணி அணியின் கேப்டன், தலைவர். எனவே இது குறித்து நான் அவரிடம் கேட்க போவதில்லை. அணியில் உள்ள மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று கேப்டனும், பயிற்சியாளரும் நினைத்தால், அதனை ஏற்க நான் தயாராக உள்ளேன். இதனால் எந்த தடையும் இல்லை.
நான் எல்லா போட்டிகளிலும் கலந்து கொள்ள தயாராக இருக்கின்றேன். ஆனால் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் தேர்வு செய்யும் 11 அடங்கிய அணிக்கும் மதிப்பு அளிக்கின்றேன்.
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதற்காக எங்களுக்கு சற்று ஓய்வு தருவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். நாங்கள் ஒரு குழுவாக செயல்படுவதில் மகிழ்ச்சி அடைகின்றோம். கேப்டன் டோணியின் விருப்பதற்கு ஏற்ப அவர் பேசலாம். கடந்த 2 ஆண்டுகளாக டோணி தான் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசி வருகின்றார். அதில் நாங்கள் திருப்தியாக உள்ளோம்.
நேற்று இலங்கைக்கு எதிரான போட்டியில் நான் உட்பட பேட்ஸ்மேன்கள் யாரும் பொறுப்புடன் விளையாடவில்லை. எனது பேட்டிங்கில் இன்னும் பொறுமையை கடைபிடிக்க வேண்டியுள்ளது. அதிரடியாக விளையாட முயன்று, சில எளிய முறைகளில் அவுட்டாகி விடுகின்றேன். அதற்காக அதிக பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளேன் என்றார்.