Search
Newsletter
 
Share This Story

குறைவான ரன்களில் முடக்கி டெல்லியை சொந்த மண்ணில் பழிக்குப் பழி தீர்த்த சென்னை

Posted by:
Published: Sunday, May 13, 2012, 9:33 [IST]

Ipl 5 Csk Vs Delhi Statistical Highlights
 

சென்னை: நடப்பு ஐ.பி.எல்.5-வது தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி எப்படி சென்னை சூப்பர்கிங்ஸ் அணியை டெல்லியில் குறைவான ரன்களில் சுருட்டி வென்றதோ அதே பாணியில் சென்னையில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி டெல்லி அணியை குறைவான ரன்களில் சுருட்டி பழிக்குப் பழி தீர்த்துக் கொண்டது

நேற்றைய போட்டி பற்றிய சில துளிகள்..

- நடப்பு ஐ.பி.எல்.-5வது தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை நேற்றைய போட்டியில்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தியுள்ளது.

- சென்னை சூப்பர்கிங்ஸ் அணியானது ஏற்கெனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இருமுறை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது. கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியையும் ஒரு போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் வென்றுள்ளது.

- சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் ஐபிஎல். போட்டிகளில் மொத்தம் 9 முறை மோதியுள்ளன. இதில் ஐந்தில் சென்னை அணியேவெற்றி பெற்றுள்ளது.

- முரளி விஜய்- ஹஸி ஜோடியானது விக்கெட் இழப்பின்றி 75 ரன்களை குவித்திருந்தது. விக்கெட் இழப்பின்றி சென்னை சூப்பர்கிங்ஸ் அணி அதிக ரன்கள் குவித்திருப்பது இது இரண்டாவது முறை. ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற்ற போட்டியில் பிளெஸ்ஸிஸ்- பத்ரிநாத் ஜோடியானது 116 ரன்களை விக்கெட் இழப்பின்றி குவித்திருந்தது.

- நேற்றைய போட்டியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நடப்பு ஐ.பி.எல். தொடரில் 300 ரன்களைக் குவித்த 2-வது வீரர் என்ற பெருமை ரெய்னாவுக்குக் கிடைத்திருக்கிறது. பிளெஸ்ஸிஸ் 12 போட்டிகளில் 385 ரன்களை எடுத்திருந்தார். அவரைத் தொடர்ந்து ரெய்னா 14 போட்டிகளில் 316 ரன்களைக் குவித்துள்ளானர்.

- ஹில்பெனாஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது முறையாக ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுள்ளார்.

- நடப்பு ஐ.பி.எல். தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் நாகர் அதிகபட்சமாக 43 ரன்களை எடுத்துள்ளார்.

- டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் வேணுகோபால் ராவும் அதிக்பட்சமாக 27 ரன்களை எடுத்துள்ளார்.

- நடப்பு ஐ.பி.எல். 5வது தொடரில் சென்னை அணி மொத்தம் 14 போட்டிகளில் 7-ல் வென்றுள்ளது. 6-ல் தோற்றுள்ளது. மொத்தம் 15 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.

- டெல்லி டேர்டெவில்ஸ் அணியானது 13 போட்டிகளில் விளையாடி 9-ல் வென்றுள்ளது. மொத்தம் 18 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.

- டெல்லி டேர்டெவ்லிஸ் அணியானது சென்னை சூப்பர்கிங்ஸ் அணியை குறைவான ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தது அதன் சொந்த மண்ணில்! இதற்குப் பழிதீர்க்கும் வகையில் டெல்லியை தமது சொந்த மண்ணில் குறைவான ரன்களில் முடக்கிப் போட்டுப் பழிதீர்த்தது சென்னை அணி.

English summary
Statistical highlights of the IPL 5 match between Delhi Daredevils and Chennai Super Kings.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil