Search
Newsletter
 
Share This Story

பாண்டிங் போல பல ஆண்டுகளுக்கு நான் கிரிக்கெட் ஆடமாட்டேன்-மைக்கேல் கிளார்க்

Posted by:
Published: Saturday, May 26, 2012, 16:23 [IST]

I Won T Be The Guy Playing At 38 3
 

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணியின் மூத்த கிரிக்கெட் வீரர்களான ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிக் ஆகியோரை போல 38 அல்லது 39 வயது வரை கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கமாட்டேன் என்று ஆஸ்திரேலியா அணியின் தற்போதைய கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க்(31). இவர் சமீபதத்தில் தனது நாட்டை சேர்ந்த மாடல் அழகி கெய்ல் போல்டியை மணந்தார். ஆஸ்திரேலியாவில் மூத்த வீரர்கள் பலரும் 35 வயதை தாண்டிய பிறகும், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகாமல் இருந்துள்ளனர்.

ஆனால் 31 வயதை எட்டியுள்ள மைக்கேல் கிளார்க், ஆஸ்திரேலியா அணியில் இருந்து பல மூத்த வீரர்களை போல, நீண்டகாலம் கிரிக்கெட் விளையாட விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது

கிரிக்கெட் போட்டிகளில் தற்போது அனுபவித்து ஆடி வருகிறேன். ஆனால் ஆஸ்திரேலியா அணியின் மூத்த வீரர்களான ஸ்டீவ்வாக், ரிக்கி பாண்டிங் ஆகியோரை போல 38 அல்லது 39 வயதை கடந்தும் கிரிக்கெட் விளையாட எனக்கு விருப்பம் இல்லை.

நான் நினைக்கும் குறைந்த காலத்திற்குள் ஆஸ்திரேலியா அணியில் பெரிய தாக்கத்தை என்னால் ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன். ஆஸ்திரேலியா அணியின் வெற்றிகளை எப்போதும் பார்த்து கொண்டிருக்க விரும்புகிறேன். இது அடைந்து விட கூடிய ஒரு இலக்கு தான்.

கிரிக்கெட் உலகில் ஆஸ்திரேலியா அணி இன்னும் பல இலக்குகளை அடைய விரும்புகிறேன். நான் ஓய்வு பெறும் முன் எனது லட்சியங்களையும், இலக்குகளை அடைந்துவிடுவேன் என்று நினைக்கிறேன் என்றார்.

English summary
Australia captain Michael Clarke, has said he would put an end to his cricketing career before he passed his mid-30s, unlike Ricky Ponting and other former Australian captains.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil