லாகூர்: பாகிஸ்தான், இலங்கை கிரிக்கெட் அணிகளை சேர்ந்த வீரர்கள், இரு நாடுகளில் நடைபெற உள்ள உள்ளூர் போட்டிகளில் விளையாட அனுமதிக்கும் பரஸ்பர ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் அஷ்ரப் தெரிவித்துள்ளார்.
இந்தியன் கிரிக்கெட் லீக் டுவென்டி20 தொடர் இந்தியாவில் மட்டுமின்றி, உலகமெங்கும் பிரபலம் அடைந்தது. சர்வதேச அளவிலான கிரிக்கெட் வீரர்கள், இந்திய உள்ளுர் கிரிக்கெட் வீரர்களுடன் விளையாடினர்.
ஆனால் இந்திய அணியை தவிர மற்ற கிரிக்கெட் அணிகள் இடையே சர்வதேச போட்டிகள் நடைபெறுவதால், ஐபிஎல் தொடர்களில் சர்வதேச வீரர்கள் முழுமையாக பங்கேற்க முடியவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வகையில் இலங்கை வீரர் மலிங்கா, தன் நாட்டு கிரிக்கெட் அணியுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்ற சர்ச்சை எழுந்தது.
மேலும் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிதியும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயக்கம் காட்டுவதாக சர்ச்சை எழுந்தது.
இந்த நிலையில் இந்தியாவை போல இலங்கை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்களும் பிரிமியர் லீக் போட்டிகளை நடத்த போவதாக அறிவித்துள்ளன. இதில் இரு நாட்டு வீரர்களும் பங்கேற்கும் வகையில், ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகி உள்ளதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் அஷ்ரப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
இரு நாட்டு அணிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம் பாகிஸ்தான் வீரர்கள், இலங்கையில் நடைபெற உள்ள பிரிமியர் லீக் போட்டியில் பங்கேற்கலாம். அதேபோல பாகிஸ்தான் பிரிமியர் லீக் நடைபெற்றால், அதில் இலங்கை வீரர்கள் பங்கேற்கலாம்.
அதேபோல இரு அணிகளை சேர்ந்த எந்த வீரரையும், அடுத்த நாட்டு பிரிமியர் லீக்கில் கலந்து கொள்ள கட்டாயப்படுத்த முடியாது.
வங்கதேசம் கிரிக்கெட் வாரியம் இந்த ஒப்பந்தத்திற்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளது. ஆனால் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் இது போன்ற உள்ளூர் தொடர்களை துவக்கினால், நிச்சயம் பாகிஸ்தான் உடன் ஒப்பந்தம் செய்து கொள்வதாக தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பாதுகாப்பு குறைப்பாட்டை சுட்டிக் கட்டி, எந்த கிரிக்கெட் அணியும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் வருவதை தவிர்க்கின்றன என்றார் என்றார்.









