ஜோகன்ஸ்பர்க்: சர்வதேச கிரிக்கெட் வாரியம்(ஐசிசி) மூலம் கொண்டு வரப்பட்ட டி.ஆர்.எஸ். முறையை ஏற்க மறுக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு(பிசிசிஐ), முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் கிரீம் போலாக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் அம்பயர்கள் அளிக்கும் தீர்ப்புகளை வீடியோ மறுஆய்வு செய்யும் முறை டி.ஆர்.எஸ் என்று அழைக்கப்படுகிறது. ஐசிசி மூலம் கொண்டு வரப்பட்ட இந்த முறைக்கு, பிசிசிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதனால் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இரு அணிகளும் விரும்பினால், போட்டியில் டி.ஆர்.எஸ். முறையை பின்பற்றலாம் என்று ஐசிசி அறிவித்தது. இந்த நிலையில் முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் போலாக், பிசிசிஐயின் எதிர்ப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
இந்தியா தனது சொந்த விருப்பத்தில் தொடர்ந்து உறுதியாக இருப்பது வருந்தத்தக்கது. இதற்காக டி.ஆர்.எஸ். முறையை ஏற்று கொள்ளும் அணிகளில் சிறந்த வீரர்கள் இருப்பதாக நினைக்க முடியாது.
இந்திய அணியில் உள்ள முதல் 6 பேட்ஸ்மேன்களுக்கு டி.ஆர்.எஸ் முறை ஏற்புடையது அல்ல. மறுஆய்வு தொழிற்நுட்பம் செயல்படும் பட்சத்தில் ஒரு பேட்ஸ்மேன் சிறப்பாக விளையாட முடியும்.
டி.ஆர்.எஸ் முறை இல்லாத நிலையில், குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே மறுஆய்வு கேட்க முடியும். இதனால் பல வீரர்களுக்கும் தவறான தீர்ப்பு வழங்கப்பட்டு ஆட்டம் இழக்கின்றனர்.
மேலும் டி.ஆர்.எஸ் முறைக்கான செலவை ஒளிப்பரப்பு நிறுவனங்கள் தான் ஏற்கின்றன. ஆனால் அதன் பயனை மட்டும் ஐசிசி பெற்று கொள்கிறது. எனவே டி.ஆர்.எஸ் முறைக்கான செலவை ஐசிசியே ஏற்று, அதன் முழு கட்டுப்பாட்டையும் தன்னிடம் வைத்து கொள்ள வேண்டும் என்றார்.










