Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இந்தியா-பாக். இடையிலான கிரிக்கெட் உறவை புதுப்பிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறும் 3 திட்டங்கள்

Posted by:
Updated: Thursday, July 12, 2012, 18:55 [IST]
 

இந்தியா-பாக். இடையிலான கிரிக்கெட் உறவை புதுப்பிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறும் 3 திட்டங்கள்
 

கராச்சி: இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் உறவை புதுப்பிக்க, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 3 திட்டங்களை அளித்துள்ளது. இதில் ஏதாவது ஒன்றை இந்திய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி என்றாலே இரு நாடுகளிலும் பெரும் பரபரப்பு தான். இரு நாடுகளிடையே ஏதோ போர் நடப்பது போன்ற எண்ணம் இருதரப்பு கிரிக்கெட் ரசிகர்கள் இடையே ஏற்பட்டு விடுகிறது.

இந்த நிலையில் கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் உறவை முறிந்தது. அதன்பிறகு கடந்த 2009ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுபயணம் மேற்கொண்ட இலங்கை அணியினர் மீது, லாகூரில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் இதில் அதிஷ்டவசமாக இலங்கை வீரர்கள் யாரும் பலியாகவில்லை.

அதன்பிறகு பாகிஸ்தானில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளே நடைபெறவில்லை. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் நிதிநெருக்கடியில் சிக்கி உள்ளது. இந்த நிலையில் தற்போது இந்தியாவுடனான கிரிக்கெட் உறவை மீண்டும் புதுப்பிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் கடும் முயற்சி எடுத்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த மே மாதம் முடிவடைந்த ஐபிஎல் 5 தொடரின் இறுதிப் போட்டியை காண பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சாகா அஷ்ரப்பிற்கு, இந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ) அழைப்பு விடுத்தது. அதன்பிறகு இரு நாட்டு கிரிக்கெட் வாரிய அதிகாரிகளும் கலந்து பேசி இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால் போட்டிகள் நடைபெறும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் தற்போது இறங்கி வந்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 3 திட்டங்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யுமாறு, பிசிசிஐக்கு சாய்ஸ் கொடுத்துள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சாகா அஷ்ரப் கூறியதாவது,

இரு நாட்டு கிரிக்கெட் உறவை புதுப்பிக்கும் வகையில் இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டால், அதன் முழு வருமானமும் பிசிசிஐக்கு சென்றுவிடும். பாகிஸ்தானுக்கு வந்து இந்திய அணி விளையாடினால், போட்டியின் கிடைக்கும் முழு வருமானமும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கிடைக்கும். இரு நாடுகளுக்கும் பொதுவான இடத்தில் வைத்து நடத்தினால், கிடைக்கும் வருமானத்தை இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் பகிர்ந்து கொள்ளலாம். இந்த 3 திட்டங்களில் பிசிசிஐயின் கருத்து தெரிந்த பிறகே அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முடியும் என்றார்.

பாகிஸ்தானில் இந்திய வீரர்களான பாதுகாப்பில் பிரச்சனை உள்ளது. இதனால் பாகிஸ்தானை இந்தியாவிற்கு சுற்றுப்பயணத்திற்கு அழைப்பது அல்லது பொதுவான இடத்தில் விளையாடுவது என்ற இரு திட்டங்களில் ஏதாவது ஒன்றை இந்திய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published:  Thursday, July 12, 2012, 17:32 [IST]
English summary
In a bid to resume bilateral cricket ties between India and Pakistan, the Pakistan Cricket Board (PCB) has put forward three proposals to their Indian counterparts.
கருத்தை எழுதுங்கள்