கொல்கத்தா: மேற்கு வங்க மாநில பந்துவீச்சாளர்களுக்கு கபில்தேவ் மூலம் பயிற்சி கொடுக்க திட்டமிட்டிருப்பதாக அம்மாநில கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜக்மோகன் டால்மியா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக மீண்டும் தேர்வாகி இருக்கிறார் ஜக்மோகன் டால்மியா. அவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், கபில்தேவின் அனுபவத்தை பயன்படுத்த மேற்கு வங்க கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டிருக்கிறது என்றார் அவர்.
டால்மியாவை எதிர்த்து கிரிக்கெட் வாரியத் தேர்தலில் போட்டியிட்ட பெளல் 14 வாக்குகள்தான் பெற்றிருந்தார். டால்மியாவுக்கு 104 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 1992-93-ம் ஆண்டு முதல் தொடர்ந்தும் மேற்கு வங்க கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக டால்மியா நீடித்து வருகிறார். இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக சரத்பவார் இருந்த காலத்தில் 19 மாதங்கள் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். அதன் பின்னர் 2008-ம் ஆண்டு முதல் தொடர்ந்தும் மேற்கு வங்க கிரிக்கெட் வாரியத் தலைவராக இருந்து வருகிறார்.










