Search
Newsletter
 
Share This Story

கம்பிரின் பொறுப்பு, டோணியின் அதிரடி-294 ரன்களை கடந்தது இந்தியா

Posted by:
Updated: Saturday, August 4, 2012, 19:07 [IST]

India Bat First Rahane Comes For Sehwag
 

பல்லேகேலே: இலங்கைக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 7 விக்கெட்களை இழந்த 294 ரன்களை குவித்தது. துவக்க வீரர் கம்பிர் பொறுப்பாக ஆடிய நிலையில், இறுதிக்கட்டத்தில் வந்த கேப்டன் டோணி அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. இத்தொடரில் 4 போட்டிகளின் முடிவில் 3-1 என்ற கணக்கில் இந்திய தொடரை கைப்பற்றி உள்ளது. இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பல்லேகெலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்திய அணியில் அதிரடி துவக்க வீரர் விரேந்திர ஷேவாக்கிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக இளம்வீரர் ரஹானேக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதேபோல இலங்கை அணியின் கேப்டன் ஜெயவர்த்தனேக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ஆஞ்சிலோ மேத்யூஸ் கேப்டனாக செயல்படுகிறார்.

போட்டியின் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. ஆனால் துவக்க வீரராக களமிறங்கிய இளம் வீரர் ரஹானே 9 ரன்களில் எல்.பி.டபில்யூ ஆனார். அடுத்த வந்த விராத் கோஹ்லி அதிரடியாக ஆடி 23 ரன்கள் எடுத்த நிலையில் எல்.பி.டபில்யூ ஆனார்.

2 விக்கெட்களை இழந்த நிலையில் வந்த ரோஹித் சர்மா வழக்கம் போல 4 ரன்களில் போல்டாகி வெளியேறினார். அடுத்து வந்த மனோஜ் திவாரி துவக்க வீரர் கம்பிர் உடன் சேர்ந்து பொறுப்பாக ஆடினார். 6 பவுண்டரிகளுடன் அரைசதம் கடந்த மனோஜ் திவாரி 65 ரன்களில் மலிங்காவின் பவுண்சர் பந்தில் கேட்சாகி வெளியேறினார். அடுத்து பந்தில் சுரேஷ் ரெய்னா டக் அவுட்டாகி ஏமாற்றினார்.

அடுத்து வந்த கேப்டன் டோணியும், இர்பான் பதானும் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தனர். 38 பந்துகளில் 1 சிக்ஸ், 8 பவுண்டரிகள் அடித்த டோணி 58 ரன்களை குவித்தார். ஆனால் மலிங்காவின் பந்தில் கேட்சாகி டோணி வெளியேறினார். கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த இர்பான் பதான் 2 பவுண்டரிகளுடன் 29 ரன்களை சேர்த்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் இந்தியா 7 விக்கெட்களை இழந்து 294 ரன்களை குவித்தது. இலங்கை தரப்பில் மலிங்கா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. இத்தொடரில் 4 போட்டிகளின் முடிவில் 3-1 என்ற கணக்கில் இந்திய தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பல்லேகெலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்திய அணியில் அதிரடி துவக்க வீரர் விரேந்திர ஷேவாக்கிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக இளம்வீரர் ரஹானேக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல இலங்கை அணியின் கேப்டன் ஜெயவர்த்தனேக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ஆஞ்சிலோ மேத்யூஸ் கேப்டனாக செயல்படுகிறார்.

மேலும் இலங்கை பந்துவீச்சாளர் ஹீரித்திற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியில் சம்மரா கப்புஜின்ரா, சேனானயகா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்றைய போட்டியில் இந்திய வெற்றி பெறுவதன் மூலம் ஒருநாள் தரவரிசையில் 2வது இடத்திற்கு முன்னேறும்.

Story first published:  Saturday, August 4, 2012, 15:38 [IST]
English summary
MS Dhoni decided to bat first in the final ODI as team India will try for a win, to claim the second spot in the ODI rankings.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil