Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஒருநாள் கிரிக்கெட் ரேங்கிங்: 4வது இடத்திற்கு முன்னேறினார் அஸ்வின்-டோணிக்கு சரிவு

Posted by:
Published: Friday, September 7, 2012, 10:52 [IST]
 

ஒருநாள் கிரிக்கெட் ரேங்கிங்: 4வது இடத்திற்கு முன்னேறினார் அஸ்வின்-டோணிக்கு சரிவு
 

துபாய்: ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய சுழல்பந்துவீச்சாளர் அஸ்வின் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆனால் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய கேப்டன் டோணி 6வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக ஆடும் வீரர்களின் தரவரிசைப்பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் வாரியம்(ஐசிசி) வெளியிடுகிறது. இதில் ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆடிவரும் பந்துவீ்ச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள், ஆல் ரவுண்டர்கள் ஆகியோரின் தரவரிசைப்பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

பேட்ஸ்மேன்கள்:

பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவின் ஆம்லா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் விராத் கோஹ்லி 2வது இடத்தில் நீடிக்கிறார். தென் ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் டிவிலியர்ஸ் 3வது இடத்தில் உள்ளார். இந்திய கேப்டன் டோணி ஒரு இடம் சரிந்து 6வது இடத்தில் உள்ளார்.

இந்திய துவக்க வீரர் கம்பிர் 9வது இடத்திலும், ஷேவாக் 24வது இடத்திலும் உள்ளனர். சுரேஷ் ரெய்னா 29வது இடத்திலும், சச்சின் 30வது இடத்திலும் உள்ளனர்.

பந்துவீச்சாளர்கள்:

பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் ஆதிக்கம் தொடர்கிறது. பாகிஸ்தான் வீரர் சயீது அஜ்மல், அணியின் சகவீரரான முஹம்மது ஹபீஸை 2வது இடத்திற்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்துள்ளார். தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் லான்வாபோ 3வது இடத்தில் உள்ளார். இந்திய சுழல்பந்துவீச்சாளர் அஸ்வின் 2 இடங்கள் முன்னேறி 4வது இடத்தை பிடித்துள்ளார்.

பந்துவீச்சாளர்களின் பட்டியலில் முதல் 30 இடங்களில் உள்ள இந்திய பந்துவீச்சாளர் அஸ்வின் மட்டுமே. மற்றப்படி ரவிந்திர ஜடேஜா 33வது இடத்திலும், ஜாகிர் கான் 34வது இடத்திலும், ஹர்பஜன் சிங் 36வது இடத்திலும் உள்ளனர்.

ஆல் ரவுண்டர்கள்:

ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் வங்கதேச வீரர் சாகிப் அல் ஹசன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். அவருக்கு அடுத்தப்படியாக பாகிஸ்தானின் முஹம்மது ஹபீஸ், ஆஸ்திரோலியாவின் ஷேன் வாட்சன் ஆகியோர் உள்ளனர். இந்திய வீரர் ஜடேஜா பட்டியலில் 9வது இடத்தில் உள்ளார்.

English summary
Indian off-spinner Ravichandran Ashwin has moved up by two places to fourth in the latest ICC One-day Rankings for bowlers while skipper Mahendra Singh Dhoni has dropped a place to sixth.
கருத்தை எழுதுங்கள்