Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

நியூசிலாந்திற்கு எதிரான முதல் டுவென்டி20 போட்டி: நாளை விசாகப்பட்டினத்தில் மழை பெய்ய வாய்ப்பு?

Posted by:
Published: Friday, September 7, 2012, 11:35 [IST]
 

நியூசிலாந்திற்கு எதிரான முதல் டுவென்டி20 போட்டி: நாளை விசாகப்பட்டினத்தில் மழை பெய்ய வாய்ப்பு?
 

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ள இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டுவென்டி20 கிரிக்கெட் போட்டியின் இடையே மழை குறுக்கிட வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் இந்திய அணி சிறப்பாக ஆடி 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. அடுத்தப்படியாக இரு அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டுவென்டி20 தொடர் நடைபெற உள்ளது. இதில் முதல் டுவென்டி20 போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.

இதற்காக இந்தியா, நியூசிலாந்து அணிகள் நேற்று விசாகப்பட்டினம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட தீர்மானித்து இருந்தனர். ஆனால் நேற்று விசாகப்பட்டினத்தில் பலத்த மழை காரணமாக வீரர்கள் மைதானத்திற்குள் வர முடியவில்லை. நேற்று இரவு விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் நாளை நடைபெற உள்ள போட்டியின் இடையே மழை குறுக்கிடலாம் என்ற பயம் ஏற்பட்டுள்ளது.

விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெற உள்ள போட்டிக்கான டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றுள்ள நிலையில், போட்டியின் இடையே மழை குறுக்கிட கூடாது என்று கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்திய அணியினர் நேற்று விசாகப்பட்டினத்திற்கு சென்ற பிறகு, டுவிட்டர் இணையதளத்தில் கருத்து தெரிவித்த ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங், விசாகப்பட்டினத்திற்கு இப்போது தான் வந்து சேர்ந்தோம். விமானம் தரையிறங்கும் முன் அருமையான இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தோம். போட்டியின் இடையே மழை பெய்யாது என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

English summary
Rain threat loomed large of the first Twenty20 International between India and New Zealand on Saturday.
கருத்தை எழுதுங்கள்