Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வாங்க தயார்-வீடியோகான் குரூப் விருப்பம்

Posted by:
Published: Friday, September 7, 2012, 10:50 [IST]
 

டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வாங்க தயார்-வீடியோகான் குரூப் விருப்பம்
 

மும்பை: நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வாங்க, வீடியோகான் குரூப் தலைவர் வேணுகோபால் தூட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் அணிகளில் ஒன்றான டெக்கான் சார்ஜர்ஸ் அணி நிதி நெருக்கடி காரணமாக, ஒப்பந்தம் செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் அளிக்க முடியாமல் திணறி வருகிறது. வரும் 15ம் தேதிக்குள் வீரர்களுக்கான சம்பளத்தை முழுமையாக கொடுத்துவிட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை விற்பனை செய்யும் வகையில் ஏலம் விட அந்த அணி நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக அணி நிர்வாகமான டெக்கான் க்ரோனிக்கல் ஹோல்டிங்ஸ் லிமிடேட்(டிசிஹெச்எல்) நேற்று பத்திரிக்கையில் விளம்பரம் வெளியிட்டது.

இந்த நிலையில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வாங்க வீடியோகான் குரூப் விருப்பம் தெரிவித்துள்ளது. கிரிக்கெட் ரசிகரான வீடியோகான் குரூப்பின் தலைவர் வேணுகோபால், கடந்த 2010ம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணியின் ஏலத்தில் கலந்து கொண்டார். ஆனால் ஏலத்தில் சகாரா குரூப் வெற்றி பெற்றது. எனவே தற்போது நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வாங்க, வீடியோகான குரூப் விருப்பம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வீடியோகான் குரூப் தலைவர் வேணுகோபால் கூறியதாவது,

டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வாங்க நாங்கள் விரும்புவது உண்மை தான். எங்கள் நிறுவனத்தை விளம்பரப்படுத்தி நுகர்வோரை கவர, இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்று நினைக்கிறேன் என்றார்.

டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் விலை சுமார் ரூ.800 கோடி வரை நிர்ணயிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அணியை வாங்கும் உரிமையாளர் ஆண்டுதோறும் பராமரிப்பிற்காக ரூ.25 கோடி செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆனால் விளம்பரங்களின் மூலம் அதைவிட அதிக வருமானத்தை உரிமையாளர் பெற்று கொள்ள வாய்ப்புள்ளது.

English summary
The chairman of Videocon Group Venugopal Dhoot confirmed his interest in bidding for the Deccan Chargers franchise. Dhoot's decision came after Chargers, currently owned by the cash-strapped Deccan Chronicle Holdings Ltd (DCHL), floated a tender under the aegis of the BCCI and invited bids for a prospective sale.
கருத்தை எழுதுங்கள்