Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்ட யுவராஜ் சிங் மீது அதிக எதிர்பார்ப்பு வைக்க வேண்டாம்- டோணி

Posted by:
Published: Saturday, September 8, 2012, 11:25 [IST]
 

இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்ட யுவராஜ் சிங் மீது அதிக எதிர்பார்ப்பு வைக்க வேண்டாம்- டோணி
 

விசாகப்பட்டினம்: புற்றுநோயில் இருந்து குணமடைந்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ள யுவராஜ் சிங்கின் மீது அதிக எதிர்பார்ப்பு வைக்க வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று 0-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இந்தியாவிற்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டுவென்டி20 தொடரில் கலந்து கொள்ள உள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டுவென்டி20 போட்டி இன்று இரவு விசாகப்பட்டினத்தில் துவங்க உள்ளது.

இப்போட்டியில் புற்றுநோயில் இருந்து குணமாகியுள்ள ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங், இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் மீ்ண்டும சர்வதேச போட்டிகளில் விளையாட உள்ளார். எனவே அவர் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஆனால் அவர் மீது அதிக எதிர்பார்ப்பு வைக்க வேண்டாம் என்று இந்திய கேப்டன் டோணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "இந்திய அணியில் யுவராஜ் சிங்கிற்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்திருப்பது குறித்து உலகமெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அவர் மீதான அதிக எதிர்பார்ப்பு காரணமாக, அவருக்கு மனஅழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. அவரை சாதாரணமாக விளையாட ரசிகர்கள் அனுமதிக்க வேண்டும். எனவே யுவராஜ் சிங்கின் மீது அதிக எதிர்பார்ப்பு வைக்க வேண்டாம்.

புற்றுநோயில் இருந்து மீண்டுவந்துள்ள அவர் உறுதியான மனநிலையுடன் உள்ளார். யுவராஜ் சிங் கடந்த காலத்தை போல கிரிக்கெட் போட்டிகளில் ரசித்து ஆட வாய்ப்பு வழங்க வேண்டும்.

இந்திய வீரர்களின் பயிற்சியின் போது யுவராஜ் சிங் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டார். அவர் வழக்கம் போல சிரித்து பேசி வருவதால், தான் கடந்து வந்த நெருக்கடியான பாதைகளை அவர் நினைவில் கொள்வதில்லை என்பது தெரிகிறது," என்றார்.

English summary
Indian captain MS Dhoni believes in keeping his emotions under check and as a leader, he wants to guard Yuvraj Singh from the hype surrounding the World Cup hero's comeback against New Zealand in the first T20 match on Saturday.
கருத்தை எழுதுங்கள்