Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இந்திய அணிக்காக மீண்டும் ஆட முடியும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை- யுவராஜ் சிங்

Posted by:
Published: Saturday, September 8, 2012, 17:14 [IST]
 

இந்திய அணிக்காக மீண்டும் ஆட முடியும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை- யுவராஜ் சிங்
 

விசாகப்பட்டினம்: புற்றுநோயில் இருந்து குணமாகி வந்துள்ள யுவராஜ் சிங், இந்திய அணிக்காக தான் மீண்டும் விளையாட முடியும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்திற்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டுவென்டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. இதில் முதல் டுவென்டி20 போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க நீண்ட இடைவெளிக்கு பிறகு, ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், பாலாஜி ஆகியோருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கடைசியாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங், இன்று மீண்டும் களமிறங்க உள்ளார். இது குறித்து அவரிடம் கேட்ட போது, இந்திய அணியில் நான் மீண்டும் ஆடுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை என்று தெரிவித்தார்.

இது குறித்து யுவராஜ் சிங் கூறியதாவது,

நான் மீண்டும் இந்திய அணிக்காக ஆடுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 4 காலடிகள் கூட நடக்க முடியாமல் தவித்தேன். ஆனால் இப்போது நிலைமை மாறியுள்ளது. எனக்கு ஒரு புதிய வாழ்க்கை கிடைத்தது போல உணருகிறேன் என்றார்

இது குறித்து இந்திய சுழல்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறுகையில், "இதை தான் அணிக்கு திரும்புதல் என்று அழைக்கிறோம். யுவராஜ் சிங்கை போல மற்றவர்களுக்கு என்னால் ஊக்கம் அளிக்கும் நபராக இருக்க முடியாது. ஆனால் அவருடன் மீண்டும் வீரர்களின் அறையில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது," என்றார்.

இன்றைய போட்டியின் இடையே மழை குறுக்கிடலாம் என்ற சந்தேகம் நீடிக்கிறது. இருந்தாலும் 27 ஆயிரம் பார்வையாளர் கொள்ளளவு கொண்ட விசாகப்பட்டினம் மைதானத்தின் டிக்கெட்கள் விறுவிறுப்பாக விற்று தீர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Indian all-rounder Yuvraj Singh said that, It is hard to believe that I will be playing for India again, said ahead of the first Twenty20 game against the New Zealand in Visakhapatnam.
கருத்தை எழுதுங்கள்