Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

கனமழையால் நியூசிலாந்துடனான முதல் 20 ஓவர் போட்டி ரத்து- யுவராஜ்சிங் ஏமாற்றம்

Posted by:
Published: Sunday, September 9, 2012, 11:52 [IST]
 

கனமழையால் நியூசிலாந்துடனான முதல் 20 ஓவர் போட்டி ரத்து- யுவராஜ்சிங் ஏமாற்றம்
 

விசாகப்பட்டினம்: நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் போட்டி கனமழையால் ரத்து செய்யப்பட்டது.

இந்தியா- நியூசிலாந்து இடையேயான முதலாவது 20 ஓவர் சர்வதேச போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற இருந்தது. புற்றுநோய் பாதிப்பில் இருந்து குணமடைந்த இந்திய நட்சத்திர வீரர் யுவராஜ்சிங், இந்த ஆட்டத்தின் மூலம் மீண்டும் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்க இருந்தார். யுவராஜின் ஆட்டத்தைக் காண பல்லாயிரம் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். யுவராஜூம் நேற்றைய போட்டி பற்றி உற்சாகமாக டிவிட்டரில் வாசகங்களைத் தட்டிவிட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கனமழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது. இது யுவராஜ்சிங்கையும் ரசிகர்களையும் பெரும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியது. போட்டி ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்களுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்பட இருக்கிறது.

இந்தியா-நிïசிலாந்து இடையிலான 2-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி சென்னையில் செவ்வாய்க்கிழமையன்று நடக்கிறது. சென்னையிலும் தற்போது மழை பெய்து வரும் நிலையில் போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகமும் இருக்கிறது.

English summary
The much-hyped comeback of Yuvraj Singh after surviving from rare germ cell cancer turned into an anti-climax in the end as the first T20 International between India and New Zealand here on Saturday was abandoned due to heavy downpour without a ball being bowled.
கருத்தை எழுதுங்கள்