Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

20 ஓவர் உலக கோப்பையையும் இந்திய அணி வெல்லும்: ஸ்ரீகாந்த் நம்பிக்கை

Posted by:
Updated: Tuesday, September 11, 2012, 16:35 [IST]
 

20 ஓவர் உலக கோப்பையையும் இந்திய அணி வெல்லும்: ஸ்ரீகாந்த் நம்பிக்கை
 

மும்பை: இலங்கையில் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் என்று இந்திய அணியின் தேர்வுக் குழுத் தலைவரான ஸ்ரீகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:

இலங்கையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி தொடங்க இன்னும் 8 நாட்கள் உள்ளது. இந்தியா வலுவான அணிகளில் ஒன்றாகும். ஆடும் லெவன் அணியை தேர்வு செய்வது அணி நிர்வாகத்தினருக்கு கடினமானதாகும். 20 ஓவர் உலக கோப்பையை வெல்லும் திறன் இந்திய அணிக்கு உள்ளது. உலக கோப்பை போட்டி முடியும் போது நான் தேர்வுக் குழுத் தலைவர் பதவியில் இருக்க மாட்டேன். தேர்வு குழு உறுப்பினர்களாக பொறுப்பு ஏற்கையில் நாங்கள் எல்லோரும் கனவு மட்டுமின்றி இலக்கை வைத்து இருந்தோம். 2011-ம் ஆண்டில் இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது என்றார் அவர்.

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் ஸ்ரீகாந்தின் பதவி காலம் வருகிற 27-ந் தேதி முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published:  Tuesday, September 11, 2012, 11:56 [IST]
English summary
Outgoing chief cricket selector Krish Srikkanth on Monday predicted an Indian triumph in the World T20, starting in Sri Lanka on September 18. "In eight days' time the T20 World Cup is starting. The Indian team is one of the strongest on paper. To pick the eleven itself is going to be difficult for the team management. It will be difficult to decide whom to drop."
கருத்தை எழுதுங்கள்