Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டுவென்டி20 உலக கோப்பை: இந்திய அணி இலங்கை சென்றது

Posted by:
Published: Wednesday, September 12, 2012, 15:44 [IST]
 

சென்னை: இலங்கையில் வரும் 18ம் தேதி துவங்க உள்ள டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய கிரிக்கெட் அணி இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றது. மேலும் பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் அணிகளும் இலங்கைக்கு சென்று சேர்ந்துள்ளன.

இலங்கையில் வரும் 18ம் தேதி முதல் டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதில் இந்தியா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பாகிஸ்தான் உட்பட மொத்தம் 12 அணிகள் பங்கேற்க உள்ளன. உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டி அடுத்த மாதம் 7ம் தேதி நடைபெற உள்ளது.

டுவென்டி20 உலக கோப்பை: இந்திய அணி இலங்கை சென்றது

நியூசிலாந்து அணிக்கு எதிரான டுவென்டி20 தொடர் நேற்றோடு முடிவடைந்த நிலையில், இன்று காலையில் கேப்டன் டோணி தலைமையிலான இந்திய அணி, இலங்கைக்கு புறப்பட்டு சென்றது. சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்புவிற்கு சென்றடைந்தது.

அதேபோல டுவென்டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள மேற்கிந்தியா தீவுகள், பாகிஸ்தான் ஆகிய அணிகளும் இலங்கைக்கு ஏற்கனவே சென்று சேர்ந்துவிட்டன.

டுவென்டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள 12 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி வரும் 19ம் தேதி நடைபெற உள்ள லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்த்து ஆட உள்ளது.

English summary
After losing the T20 series against New zealand in Chennai, Indian Cricket team arrived at Colombo to take part in T20 World cup on today.
கருத்தை எழுதுங்கள்