Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

'டாஸ்' வென்ற டோணியின் தவறான முடிவு எங்களுக்கு அதிர்ச்சி அளித்தது: ஜேம்ஸ் பிராங்க்ளின்

Posted by:
Published: Wednesday, September 12, 2012, 13:19 [IST]
 

'டாஸ்' வென்ற டோணியின் தவறான முடிவு எங்களுக்கு அதிர்ச்சி அளித்தது: ஜேம்ஸ் பிராங்க்ளின்
 

சென்னை: சென்னையில் நடைபெற்ற 2வது டுவென்டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் டோணி பதட்டத்துடன் முதலில் பந்துவீச முடிவு எடுத்தது, நியூசிலாந்து அணியினருக்கு அதிர்ச்சி அளித்ததாக நியூசிலாந்து ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் பிராங்க்ளின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து அணி இங்கு 2 டுவென்டி20 போட்டிகளில் பங்கேற்றது. இதில் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்த நிலையி்ல் இரு அணிகளுக்கு இடையிலான 2வது டுவென்டி20 போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 2வதாக பேட்டிங் தேர்வு செய்து 1 ரன்னில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் டோணி பதட்டத்துடன் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது, நியூசிலாந்து அணியினருக்கு அதிர்ச்சி அளித்ததாக நியூசிலாந்து ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் பிராங்க்ளின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

ஐபிஎல் தொடர்களில் விளையாடி பழக்கமுள்ள இந்திய அணி வீரர்களுக்கு, சென்னை ஆடுகளத்தின் தன்மை நன்கு தெரியும். இந்த நிலையில் நேற்று போட்டியின் டாஸ் வென்ற இந்திய கேப்டன் டோணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது, நியூசிலாந்து அணியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டாஸ் வென்ற போது இந்திய கேப்டன் பதட்டத்துடன் தவறுதலாக முடிவு எடுத்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

விராத் கோஹ்லியை அவுட்டாக்கிய பிறகு வெற்றிக்கு தேவைப்படும் ரன் ரேட்டை அதிகரிக்க முடிவு செய்தோம். அதன்மூலம் அடுத்து வரும் பேட்ஸ்மேன்களை அழுத்தத்திற்கு உட்படுத்தி விரைவில் அவுட்டாக்க திட்டமிட்டோம். டோணி அதிரடியாக ஆடக் கூடியவர். ஆனால் நேற்று பந்து விக்கெட்டிற்கு மெதுவாக வந்ததால், அவரால் அடித்து ஆட முடியவில்லை.

இந்திய சுற்றுப்பயணம் எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்த எங்களுக்கு, டுவென்டி20 தொடரை கைப்பற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. டுவென்டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக, இந்தியாவிற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

இலங்கையில் நடைபெற உள்ள டுவென்டி20 போட்டிகளும் எங்களுக்கு கடும் சவாலாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். ஆனால் சவால்களை எதிர்கொண்டு அணியை வெற்றி பாதையில் அழைத்து செல்ல நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

English summary
New Zealand all-rounder James Franklin feels MS Dhoni erred in his decision after winning the toss, and said the entire Kiwi outfit was surprised when the India skipper decided to bowl first in the second Twenty20 game at a relatively slow Chepauk pitch.
கருத்தை எழுதுங்கள்