Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

புகழின் உச்சியில் இருக்கும் போதே சச்சின் ஓய்வு பெறுவது நல்லது: இம்ரான் கான்

Posted by:
Published: Wednesday, September 12, 2012, 16:27 [IST]
 

புகழின் உச்சியில் இருக்கும் போதே சச்சின் ஓய்வு பெறுவது நல்லது: இம்ரான் கான்
 

லாகூர்: இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், புகழின் உச்சியில் உள்ள போதே ஓய்வு பெறுவது நல்லது என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர்(39). சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளை படைத்து புகழின் உச்சியில் இருப்பவர். இந்தியாவில் மட்டுமின்றி உலகமெங்கும் ரசிகர்களை கொண்டவர்.

கடந்த 23 ஆண்டுகளாக இந்திய அணிக்காக ஆடி வரும் சச்சின், விரைவில் ஓய்வு அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் சிலர், சச்சின் தொடர்ந்து இந்திய அணிக்காக ஆட வேண்டும் என்று அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக ஆடி வரும் சச்சின், புகழின் உச்சியில் இருக்கும் போதே ஓய்வு பெற வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

சச்சின் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். ஆனால் அவர் தொடர்ந்து சிறப்பாக ஆடினால் மட்டுமே அந்த பெயரை காப்பாற்றி கொள்ள முடியும். எனவே அவர் புகழின் உச்சியில் இருக்கும் போதே, ஓய்வை அறிவிக்க வேண்டும். சச்சின் போன்ற ஒரு சிறந்த வீரர், அணி தேர்வு குழுவின் கருணையை எதிர்பார்த்து இருப்பதை நான் விரும்பவில்லை. அது போன்ற சூழ்நிலையில் சச்சின் சிக்கி கொள்ள கூடாது.

சர்வதேச போட்டிகளில் சச்சின் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார். எனக்கு இருக்கும் திறமையை என்னால் வெளிப்படுத்த முடியாத நிலை ஏற்படும் போது, ரசிகர்கள் எனது சாதனைகளை மறந்துவிடுவார்கள். இதனால் நான் புகழின் உச்சியில் இருந்த போதே, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றேன். எனவே சச்சினுக்கு நல்ல பெயர் இருக்கும் போதே ஓய்வு பெறுவது குறித்து அவர் ஆலோசிக்க வேண்டும்.

ஒரு சிறந்த கிரிக்கெட் வீரரான சச்சின், இந்திய மக்களின் மனத்தில் இடம் பிடித்துள்ளார். கடந்த 23 ஆண்டுகளாக சச்சினின் ஆட்டத்தை பார்த்து வரும், இந்திய மக்களால் அவரது பிரிவை தாங்க முடியாது என்பது தெரிகிறது. ஆனால் மற்றொரு பகுதியில், தொடர்ந்து விளையாடுவதால் சச்சினின் புகழ் மங்கி போக வாய்ப்புள்ளது.

எனவே ஓய்வு பெறுவது எப்போது என்பதை குறித்து சச்சின் யோசிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. பாகிஸ்தான் அணியின் தேர்வு குழுவினரின் கருணையை நான் எதிர்பார்க்கவில்லை. இதனால் தான் நான் நன்றாக ஆடி கொண்டிருந்த போதே ஓய்வை அறிவித்தேன். மேலும் மக்கள் என்னிடம் நீங்கள் ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டது என்று கூறும் வரை நான் காத்திருக்க விரும்பவில்லை.

சுனில் கவாஸ்கரின் ஓய்வு முடிவை நான் பாராட்டுகிறேன். அவரால் தொடர்ந்து ஆட முடிந்த போதும், ஓய்வு பெற்று கொண்டார். நான் பார்த்த பேட்ஸ்மேன்களில் கவாஸ்கரிடம் தான் சிறந்த தடுப்பாட்ட திறமையை கண்டேன். அது போன்ற திறமைகளை வைத்து அவர் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று இருக்கலாம். ஆனால் கவாஸ்கர் புகழின் உச்சியில் இருந்த போதே ஓய்வு பெற்று கொண்டார் என்றார்.

English summary
Former Pakistan captain Imran Khan said that, Sachin is such a great player but I can only say if I were in his position, I would want to leave on a high and my greatest worry was that I should never be at the mercy of the selectors.
கருத்தை எழுதுங்கள்