Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

சாம்பியன்ஸ் லீக் டுவென்டி20 கிரிக்கெட் தொடர்: டிக்கெட் விற்பனை துவங்கியது

Posted by:
Published: Wednesday, September 12, 2012, 10:19 [IST]
 

சாம்பியன்ஸ் லீக் டுவென்டி20 கிரிக்கெட் தொடர்: டிக்கெட் விற்பனை துவங்கியது
 

பெங்களூர்: தென் ஆப்பிரிக்காவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் லீக் டுவென்டி20 கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் விற்பனை நேற்று துவங்கியது.

தென் ஆப்பிரிக்காவில் அடுத்த மாதம் (அக்டோபர்) 9 முதல் 28ம் தேதி வரை சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த உள்ளூர் அணிகள் பங்கேற்க உள்ளன.

இதில் இந்தியாவை சேர்ந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகளும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த சிட்னி சிக்ஸர்ஸ், பெர்த் ஸ்கார்செர்ஸ் ஆகிய 2 அணிகளும், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டைட்டன்ஸ், ஹைவெய்ட் லயன்ஸ் ஆகிய 2 அணிகளும் தொடரில் நேரடியாக கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளன.

இங்கிலாந்தின் ஹாம்ப்ஷையர், யார்க்ஷையர், பாகிஸ்தானின் சியால்காட் ஸ்டாலியன்ஸ். நியூசிலாந்தின் ஆக்லாந்து ஏசஸ், தென் ஆப்பிரிக்காவின் டிரினிடாட் டுபாகோ, இலங்கையின் உவா நெக்ஸ்ட் ஆகிய அணிகள் தகுதி சுற்றுப் போட்டிகளில் மோத உள்ளன. இதில் வெற்றி பெறும் இரு அணிகள், நேரடியாக தொடரில் தகுதி பெற்ற அணிகளுடன் மோதும்.

தகுதி பெற்ற 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளன. போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நேற்று துவங்கியது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்ற 4 அணிகள், சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்க உள்ளதால், சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு ரசிகர்கள் இடையே அதிக வரவேற்பு உள்ளது. டிக்கெட்கள் www.clt20.com என்ற இணையதளத்தில் கிடைக்கிறது.

English summary
Sales for Karbonn Smart Champions League Twenty20 (CLT20) 2012 tickets have opened to the South African public this morning from 0900 (local time) on September 11, a media release from the organisers said.
கருத்தை எழுதுங்கள்