Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

தனது 'பார்மை' நிரூபித்துவிட்டார் யுவராஜ் சிங்: கேப்டன் டோணி

Posted by:
Published: Wednesday, September 12, 2012, 15:13 [IST]
 

தனது 'பார்மை' நிரூபித்துவிட்டார் யுவராஜ் சிங்: கேப்டன் டோணி
 

சென்னை: புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு குணமாகி, கடந்த 10 மாதங்களுக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பியுள்ள யுவராஜ் சிங், தனது ஆல் ரவுண்டர் பார்மை நிரூபித்து காட்டியுள்ளதாக இந்திய கேப்டன் டோணி பாராட்டி உள்ளார்.

நுரையீரல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங், தற்போது குணமடைந்து தனது பழைய உடல்நிலைக்கு திரும்பியுள்ளார். கடந்த 10 மாத இடைவெளிக்கு பிறகு யுவராஜ் சிங், நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான டுவென்டி20 போட்டியில் பங்கேற்றார். இதில் சிறப்பாக பேட்டிங் செய்த யுவராஜ் சிங், 2 சிக்ஸ், 1 பவுண்டரி அடித்து 34 ரன்களை குவித்தார்.

இந்த நிலையில் யுவராஜ் சிங்கின் ஆட்டத்தை பாராட்டியுள்ள இந்திய கேப்டன் டோணி, அவர் தனது ஆல் ரவுண்டர் பார்மை நிரூபித்து காட்டியுள்ளதாக தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

கடந்த 10 மாதங்களுக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் யுவராஜ் சிங் ஆடினார். நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்து தனது பார்மை நிரூபித்துள்ளார். இதன்மூலம் அவர் மீது இருந்த எதிர்பார்ப்பு என்ற அழுத்தம் நீங்கியுள்ளது.

அவருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தி உள்ள யுவராஜ் சிங், அடுத்து வரும் போட்டிகளிலும் ஜொலிப்பார் என்று நம்புகிறேன். நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் சர்வதேச போட்டியில் கலந்து கொண்டதால், ரசிகர்களுக்கு அவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

யுவராஜ் சிங்கை மீண்டும் ஆடுகளத்தில் பார்த்த போது மகிழ்ச்சி அடைந்தேன். தற்போது இந்திய அணிக்கு திரும்பி உள்ள யுவராஜ் சிங் சிறந்த ஆல் ரவுண்டராக இருந்து அணியின் பேட்டிங்-பவுலிங் சமநிலைக்கு உதவுவார் என்று நம்புகிறேன். டுவென்டி20 போட்டிகளில் யுவராஜ் சிங் முழுநேர பந்துவீச்சாளராக 4 ஓவர்களை வீச முடியாது. அவர் ஒரு பகுதிநேர பந்துவீச்சாளராக செயல்படுவார்.

இந்திய அணிக்கு 4 முழுநேர பந்துவீச்சாளர்கள் தேவை. 5வது பந்துவீச்சாளர் பகுதிநேர பந்துவீச்சாளராக இருப்பார். என்னை பொறுத்தவரை ஒரு கிரிக்கெட் வீரர் களத்திற்குள் விளையாட வந்துவிட்டால், மற்ற காரியங்களை மறந்துவிட வேண்டும். யுவராஜ் சிங் தான் கடந்து வந்த இக்கட்டான பாதைகளை மறந்து, நேற்று சிறப்பாக விளையாடினார்.

நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவினாலும், அதில் இருந்து இந்திய அணிக்கு பல சாதகமான காரியங்களை கற்று கொள்ள முடிந்தது. கடைசி ஓவர்களில் வேகப்பந்துவீச்சாளர் பாலாஜி சிறப்பாக பந்துவீசினார் என்றார்.

English summary
By performing well in his comeback game post a serious illness, Yuvraj Singh can afford to be his normal self as the pressure is now off his head, says India skipper Mahendra Singh Dhoni.
கருத்தை எழுதுங்கள்