Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

மின்னல் வேக உசைன் போல்ட் பவுன்ஸர் பந்துகளை வீசுவதில் 'கில்லாடி': கிறிஸ் கெய்ல்

Posted by:
Published: Thursday, September 13, 2012, 14:53 [IST]
 

மின்னல் வேக உசைன் போல்ட் பவுன்ஸர் பந்துகளை வீசுவதில் 'கில்லாடி': கிறிஸ் கெய்ல்
 

கொழும்பு: ஒலிம்பிக் தங்கப்பதக்க வீரர் உசைன் போல்ட் கிரிக்கெட் போட்டிகளில் பவுன்ஸர் பந்துகளை வீசி பேட்ஸ்மேன்களை திணறியடிப்பதில் திறமையானவர் என்று மேற்கிந்திய தீவுகள் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 100, 200 மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டம் போன்ற போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றவர் ஐமைக்கா வீரர் உசைன் போல்ட். அவரது புதிய உலக சாதனையின் மூலம் உலகிலேயே வேகமான மனிதன் என்ற புகழை பெற்றார்.

இந்த நிலையில் உசைன் போல்ட் அளித்த போட்டி ஒன்றில், தனக்கு கிரிக்கெட் விளையாட்டு மிகவும் பிடிக்கும் என்றும், இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க விரும்புவதாகவும் தெரிவித்தார். மேலும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற ஒரு உள்ளூர் போட்டியில், அந்நாட்டு அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்லை பந்துவீசி அவுட்டாக்கியதாக தெரிவித்தார்.

உசைன் போல்ட்டின் விருப்பத்திற்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே, ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் போட்டியான பிக் பாஸ் லீக்கில் உசைன் போல்ட்டை பங்கேற்க வைக்க முயன்றார்.

இந்த நிலையில் கிரிக்கெட் போட்டிகளில் பவுன்ஸர் பந்துகளை வீசுவதில், உசைன் போல்ட் திறமையானவர் என்று மேற்கிந்திய வீரர் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

உசைன் போல்ட் கூறியது போல தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக நடத்தப்பட்ட உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் நானும், உசைன் போல்ட்டும் ஆடினோம். எனக்கு எதிரணியில் களமிறங்கிய அவர் வீசிய பவுன்ஸர் பந்து எனது தலையில் பட்டு நிலைக்குலைந்து போய்விட்டேன்.

எனவே கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்று உசைன் போல்ட் விருப்பம் தெரிவிப்பதில் தவறு இல்லை. பவுன்ஸர் பந்துகளை சிறப்பாக வீசும் திறமை கொண்ட உசைன் போல்ட், கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதில் எந்த தவறும் இல்லை என்றார்.

English summary
West Indies explosive opener Chris Gayle, feels the Olympic gold medallist Usain Bolt is talented and could definitely excel in the game.
கருத்தை எழுதுங்கள்