Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டுவென்டி20 உலக கோப்பையை இந்தியா வெல்லும்: டோணி நம்பிக்கை

Posted by:
Published: Thursday, September 13, 2012, 10:09 [IST]
 

டுவென்டி20 உலக கோப்பையை இந்தியா வெல்லும்: டோணி நம்பிக்கை
 

கொழும்பு: இலங்கையில் வரும் 18ம் தேதி துவங்க உள்ள டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்று, இந்தியா கோப்பையை கைப்பற்றும் என்று கேப்டன் டோணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வரும் 18ம் தேதி முதல் டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் துவங்க உள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து உட்பட மொத்தம் 12 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இத்தொடரில் கலந்து கொள்ள கேப்டன் டோணி தலைமையிலான இந்திய அணி நேற்று இலங்கைக்கு புறப்பட்டு சென்றது.

அப்போது நிருபர்களிடம் பேசிய டோணி, இலங்கையில் நடைபெற உள்ள டுவென்டி20 உலக கோப்பையை இந்தியா கைப்பற்றும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

இந்திய அணி தற்போது சிறந்த பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது. ஆனால் உலக கோப்பை தொடரில் சில முக்கிய பேட்ஸ்மேன்கள் கூட பகுதிநேர வீரர்களாக களமிறக்கப்படலாம். டுவென்டி20 போட்டிகளில் பகுதிநேர வீரர்களின் பணி முக்கியமானது. இந்திய அணியில் உள்ள பகுதிநேர வீரர்கள் தற்போது சிறப்பாக ஆடி வருகின்றனர். எனவே இந்திய அணி தற்போது சிறந்த நிலையில் உள்ளது.

இந்திய அணிக்காக சிறப்பாக ஆட வேண்டும் என்ற விருப்பம் இளம்வீரர்களிடையே ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பையை இந்திய அணி வென்றது. அதேபோல டுவென்டி20 உலக கோப்பையையும் வெல்ல வேண்டியது அவசியமாகும். இதற்காக டுவென்டி20 போட்டிகளில் சிறப்பாக ஆட வேண்டிய காட்டாயம் ஏற்பட்டுள்ளது.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை போல டுவென்டி20 போட்டிகளில் அணியை தயார்ப்படுத்த அதிக நேரம் கிடைப்பதில்லை. டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவிட்டு, உடனே டுவென்டி20 போட்டிகளில் அதிரடியாக ஆடுவது கடினமான பணியாகும். ஆனால் கிரிக்கெட்டை பொறுத்த 3 வகையான போட்டிகளுக்கும் ஏற்றவாறு வீரர்கள் தங்களை மாற்றி கொள்ள வேண்டும். இந்திய வீரர்களிடம் அந்த திறமை உள்ளது.

இந்தியாவில் விளையாடுவது போன்ற சூழ்நிலை இருப்பதால், இலங்கையில் விளையாடுவது எங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்திய வீரர் ஷேவாக் போன்ற வீரர்கள் 3 வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக ஆடி வருகின்றனர் என்றார்.

இந்திய அணியில் யுவராஜ் சிங்கை மீண்டும் தேர்வு செய்ய காரணம், ஒரு உணர்ச்சிப்பூர்வமான முடிவா அல்லது அவரது அதிரடி ஆட்டமா? என்பது குறித்து கேட்டதற்கு டோணி பதிலளிக்க மறுத்துவிட்டார். இந்திய அணிக்கு யுவராஜ் சிங் ஒரு சொத்து என்று மட்டும் கூறினார்.

டுவென்டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் இப்பிரிவில் உள்ளன. இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை வரும் 19ம் தேதி எதிர்கொள்கிறது.

English summary
The Indian cricket team arrived Srilanka for the Twenty20 World Cup with captain Dhoni saying that he has a "very good team" which is capable of regaining the coveted trophy.
கருத்தை எழுதுங்கள்