Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

விளையாட்டு எழுத்தாளர்கள் சங்கத்தின் சிறந்த விளையாட்டு வீரர் விருதை பெற்றார் டிராவிட்

Posted by:
Published: Thursday, September 13, 2012, 12:27 [IST]
 

விளையாட்டு எழுத்தாளர்கள் சங்கத்தின் சிறந்த விளையாட்டு வீரர் விருதை பெற்றார் டிராவிட்
 

பெங்களூர்: பெங்களூர் விளையாட்டு எழுத்தாளர்கள் சங்கத்தின் கடந்த ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பெற்றுள்ளார். முன்னாள் இந்திய வீரர் லட்சுமண் விருதை வழங்க, டிராவிட் பெற்று கொண்டார்.

பெங்களூர் விளையாட்டு எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பாக விளையாட்டு உலகில் சிறந்த செயலாற்றும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக ஆடிய வீரர்கள், வீராங்கனைகளுக்கான விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

இதில் கடந்த ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பெற்றார். இந்த விருதை முன்னாள் இந்திய வீரர் லட்சுமண் வழங்க, ராகுல் டிராவிட் பெற்று கொண்டார். கிரிக்கெட் ஆடுகளத்தில் லட்சுமண், டிராவிட் ஜோடி சேர்ந்து பல சிறப்பான இன்னிங்ஸ்களை ஆடி இந்திய அணியின் வெற்றிகளை பெற்று தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் இந்திய ஒலிம்பிக் வீரர்கள், வீராங்கனைகள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், தடகள வீரர்கள், நீச்சல் வீரர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஜி.ஆர்.விஸ்வநாத், வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றார். இந்திய பாட்மிண்டன் வீராங்கனை அஸ்வினி பொன்னப்பா, கடந்த ஆண்டின் சிறந்த வீராங்கனைக்கான விருதை பெற்றார்.

விருதை பெற்று கொண்ட ராகுல் டிராவிட் கூறியதாவது,

எனது கிரிக்கெட் ஆட்டத்திற்கு மதிப்பு அளிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டிருப்பதாக நினைக்கிறேன். ஒரு விளையாட்டு வீரராக நான் விருது பெறுவது இதுவே கடைசியாக இருக்கும் என்று கருதுகிறேன். இனி பல ஆண்டுகளுக்கு பிறகு விஸ்வநாத்தை போல நானும் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற வாய்ப்புள்ளது. உள்ளூர் விளையாட்டு வீரர்களின் திறமைகளை பாராட்டி விருது வழங்குவது ஒரு ஊக்கம் அளிக்கும் பணியாகும் என்றார்.

English summary
Sports Writer's Association of Bangalore (SWAB) chose Laxman to hand over the "Best Sportsperson (Male)" award to Dravid on which saw the coming together of many sports achievers under one roof.
கருத்தை எழுதுங்கள்