Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

பேஸ்புக்கில் இணைந்தார் சச்சின்-லட்சக்கணக்கான ரசிகர்களின் லைக்ஸ் பெற்றார்

Posted by:
Updated: Thursday, September 13, 2012, 12:34 [IST]
 

பேஸ்புக்கில் இணைந்தார் சச்சின்-லட்சக்கணக்கான ரசிகர்களின் லைக்ஸ் பெற்றார்
 

டெல்லி: இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் பேஸ்புக்கில் இணைந்துள்ளார். இவரது பேஸ்புக் கணக்கு துவங்கிய சில மணிநேரத்திற்குள் லட்சக்கணக்கான ரசிகர்கள் தங்களின் விருப்பத்தை (லைக்ஸ்) தெரிவித்தனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேஸ்ட்மேன் சச்சின் டெண்டுல்கர்(39). கடந்த 23 ஆண்டுகளாக இந்திய அணிக்காக ஆடி வரும் இவர், சர்வதேச போட்டிகளில் பல சாதனைகளை படைத்துள்ளார். இதனால் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் சச்சினுக்கு ரசிகர்கள் உள்ளனர்.

டுவிட்டர் இணையதளத்தில் ஏற்கனவே கணக்கை துவக்கியுள்ள சச்சின், தனது கருத்துகளை அவ்வப்போது அதில் வெளியிட்டு வருகிறார். தற்போது அவரது டுவிட்டர் கணக்கை 26,80,791 பேர் பின் தொடர்ந்து (பாலோ) வருகின்றனர்.

இந்த நிலையில் சச்சின் தற்போது பேஸ்புக் இணையதளத்திலும் இணைந்துள்ளார். சச்சின் தனது பேஸ்புக் கணக்கை துவங்கிய சில மணிநேரங்களில் 4 லட்சத்திற்கு மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்தனர்.

சச்சினின் பேஸ்புக் பக்கத்தில் பல கிரிக்கெட் போட்டிகளின் போட்டோ, வீடியோ ஆகியவை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தனது பேஸ்புக் கணக்கின் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு சச்சின் பதிலளித்து வருகிறார்.

சச்சினின் பேஸ்புக் கணக்கில், சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உலக கோப்பையை வென்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணியை பாராட்டி உள்ளார். மேலும் தனது பயணங்கள், அனுபவங்கள், கடந்த ஆண்டு உலக கோப்பை வென்று தனது நீண்டகால கனவு நினைவானது போன்றவை குறித்த தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

கடைசியாக புற்றுநோயில் இருந்து குணமடைந்து 10 மாதங்களுக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பியுள்ள யுவராஜ் சிங்கை பாராட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,

என்னை பொறுத்த வரை யுவராஜ் சிங் ஒரு சாம்பியன். சாம்பியன் என்பவர் எப்போதுமே அதே நிலையில் தான் நீடிப்பார். கடந்த ஆண்டு உலக கோப்பை தொடரில் அவர், தொடர் நாயகன் விருதை பெற்றதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கரின் பேஸ்புக் பக்கம்

Story first published:  Thursday, September 13, 2012, 11:56 [IST]
English summary
Master Blaster Sachin made his Facebook debut. And what more he already has 4,07,908 and counting, of course likes in a matter of hours.
கருத்தை எழுதுங்கள்