Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டுவென்டி20 உலக கோப்பை பயிற்சி போட்டி: மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது இலங்கை

Posted by:
Published: Thursday, September 13, 2012, 15:26 [IST]
 

டுவென்டி20 உலக கோப்பை பயிற்சி போட்டி: மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது இலங்கை
 

கொழும்பு: டுவென்டி20 உலக கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டியில் இலங்கை அணியின் கேப்டன் ஜெயவர்த்தனேயும், தில்ஷனும் அரைசதம் அடித்து, மேற்கிந்திய தீவுகள் அணியை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினர்.

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 18ம் தேதி முதல் இலங்கையில் துவங்க உள்ளது. இதில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் உட்பட மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் பங்கேற்க உள்ளன.

இந்த நிலையில் லீக் போட்டிகள் துவங்கும் முன் அணிகளுக்கு இடையிலான பயிற்சி போட்டி இன்று துவங்கியது. இன்று நடைபெற்ற பயிற்சி போட்டியில் இலங்கை, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. போட்டியின் டாஸ் வென்ற இலங்கை முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்லுக்கு பயிற்சி போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டது. காயத்தில் இருந்து குணமடைந்த இலங்கை வீரர்கள் சங்கக்காரா, குலசேகரா ஆகியோர் போட்டியில் பங்கேற்றனர்.

கிறிஸ் கெய்ல் இல்லாத நிலையில் மேற்கிந்திய தீவுகள் பேட்டிங் வரிசை ரன்களை சேர்க்க தடுமாறியது. ஜான்சன் சார்ல்ஸ்(30), பிராவோ(29), போல்லார்டு(28) ஆகியோர் மட்டுமே ஓரளவுக்கு ஆடி ரன்களை சேர்த்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட்களை இழந்து 132 ரன்களை சேர்த்தது.

133 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எளிய இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு துவக்க வீரர்கள் முனவீரா, திலக்ரத்னே தில்ஷன் ஜோடி சிறப்பான துவக்கத்தை அளித்தது. ஆனால் முனவீரா 24 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.

அதன்பிறகு வந்த கேப்டன் ஜெயவர்த்தனே, தில்ஷனுடன் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பாதையில் அழைத்து சென்றார். இருவரும் அரைசதம் கடக்க, இலங்கை அணியின் வெற்றி உறுதியானது. 15.4 ஓவர்களின் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தில்ஷன் 38 பந்துகளில் 1 சிக்ஸ், 5 பவுண்டரிகள் அடித்து 50 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். ஜெயவர்த்தனே 35 பந்துகளில் 2 சிக்ஸ், 6 பவுண்டரிகள் அடித்து 57 ரன்களை சேர்த்து அவுட்டாகாமல் இருந்தார்.

மற்றொரு பயிற்சி போட்டியில் ஜிம்பாப்பே, அயர்லாந்து அணிகள் மோதின. இதில் கத்துக்குட்டி அணியான அயர்லாந்து அணி 54 ரன்களில் வெற்றி பெற்றது.

English summary
Unbeaten half centuries from captain Mahela Jayawardene and opener Tillakaratne Dilshan powered Sri Lanka to a comprehensive 9 wicket victory over West Indies in a Twenty20 warm-up game ahead of the ICC World Twenty20 2012.
கருத்தை எழுதுங்கள்