Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

பாகிஸ்தானின் தோல்விகளுக்கு கேப்டன் மட்டுமே காரணமா?-டெஸ்ட் கேப்டன் மிஸ்பா கேள்வி

Posted by:
Updated: Thursday, September 13, 2012, 11:02 [IST]
 

பாகிஸ்தானின் தோல்விகளுக்கு கேப்டன் மட்டுமே காரணமா?-டெஸ்ட் கேப்டன் மிஸ்பா கேள்வி
 

லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்ற போட்டிகளில் தோல்வி அடைந்ததற்கு கேப்டன் மட்டுமே காரணம் என்று குற்றப்படுத்த கூடாது என்று பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.

ஒருநாள் மற்றும் டுவென்டி20 தொடர்களில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்றது. இதில் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது. இதையடுத்து நடைபெற்ற டுவென்டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தான் அபாரமாக ஆடி தொடரை கைப்பற்றியது.

ஆனால் இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டுவென்டி20 போட்டியில் சொதப்பிய பாகிஸ்தான் அணி 94 ரன்களில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பாகிஸ்தான் டுவென்டி20 போட்டிகளுக்கான கேப்டன் முஹம்மது ஹபீஸ் தான் காரணம் என்ற பரவலான குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் தோல்விகளுக்கு கேப்டன் மட்டுமே காரணம் என்று குற்றச்சாட்ட முடியாது என்று பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

ஒரு கிரிக்கெட் அணியின் வெற்றி மற்றும் தோல்விகளுக்கு, அணியின் கேப்டன் மட்டுமே காரணமல்ல என்பதை முதலில் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். கிரிக்கெட் என்பது ஒரு குழு விளையாட்டு. அதில் வெற்றி, தோல்வி என்பது அணியினரின் செயல்பாட்டை பொறுத்தது. இதற்கு ஒரு தனிப்பட்ட வீரர் அல்லது கேப்டனை மட்டும் குற்றப்படுத்த முடியாது.

வெற்றி பெற்றால் அணியை மொத்தமாக புகழுவது போல, தோல்வி அடைந்தாலும் அணியாக தான் விமர்சிக்க வேண்டும். கிரிக்கெட் போட்டிகளை பொறுத்த வரை ஒவ்வொரு போட்டிகளில் இருந்தும், நாம் பல காரியங்களை கற்று கொள்ள வேண்டும்.

பாகிஸ்தான் அணியில் சிறந்த பந்துவீச்சாளர்களும், பேட்ஸ்மேன்களும் உள்ளனர். எனவே தோல்விக்கு தனிப்பட்ட ஒரு நபரை குற்றப்படுத்துவது ஒவ்வொருவரின் மனநிலையை பொருத்தது என்றார்.

Story first published:  Thursday, September 13, 2012, 8:42 [IST]
English summary
The culture of blaming the captain for everything must stop in the country as cricket is a team game, Pakistan's Test and ODI skipper Misbah-ul-Haq has said.
கருத்தை எழுதுங்கள்