Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

கிரிக்கெட் ரசிகர்களை கவர டுவென்டி20 உலக கோப்பைக்காக தனி வெப்சைட்டை துவக்கியது ஐசிசி

Posted by:
Published: Friday, September 14, 2012, 9:04 [IST]
 

கிரிக்கெட் ரசிகர்களை கவர டுவென்டி20 உலக கோப்பைக்காக தனி வெப்சைட்டை துவக்கியது ஐசிசி
 

கொழும்பு: இலங்கையில் நடைபெற உள்ள டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்காக, சர்வதேச கிரிக்கெட் வாரியம்(ஐசிசி) தனி வெப்சைட்டை துவக்கியுள்ளது. இதில் உலக கோப்பை தொடர் தொடர்பான அனைத்து விவரங்களும் வெளியிடப்பட்டு வருகிறது.

இலங்கையில் வரும் 18ம் தேதி டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் துவங்க உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, வங்கதேசம் உட்பட மொத்தம் 12 அணிகள் பங்கேற்க உள்ளன. இதற்கான பயிற்சி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் உலகமெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை கவரும் வகையில், டுவென்டி20 உலக கோப்பைக்காக தனி வெப்சைட் ஒன்றை ஐசிசி துவக்கியுள்ளது. இதில் போட்டிகளின் அட்டவணை, அணிகளின் வெற்றி மற்றும் தோல்வி விவரங்கள், வீரர்களின் சாதனைகள், போட்டோ, வீடியோ ஆகியவை இடம் பெற்றுள்ளது. மேலும் ஒவ்வொரு போட்டிக்கு பிறகும், அதன் முக்கிய காட்சிகள் (ஹை-லைட்ஸ்) வெளியிடப்படும்.

தற்போது தொடரில் பங்கேற்க உள்ள அணிகளின் கேப்டன்கள், வீரர்கள் குறித்த செய்திகள், பேட்டிகள் ஆகியவை இந்த வெப்சைட்டில் வெளியிடப்பட்டு வருகிறது. போட்டிகள் துவங்கிய பிறகு ஒவ்வொரு போட்டியின் போது, பந்துக்கு பந்து ரன் அட்டவணை வெளியிடப்படும்.

இது குறித்து ஐசிசி பொது மேலாளர் கேம்பெல் ஜேம்ஸன் கூறியதாவது,

இந்த ஆண்டின் கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையில், ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் தொடர், டுவென்டி20 உலக கோப்பை. எனவே ரசிகர்களுக்கு உலக கோப்பை குறித்து தகவல்களை உடனுக்குடன் அளிக்க, தனி வெப்சைட் துவக்கி உள்ளோம் என்றார்.

மேலும் டுவென்டி20 உலக கோப்பை தொடரை குறித்த தகவல்களை ஐசிசியின் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் இணையதள அக்கவுண்ட்களிலும் காணலாம். பேஸ்புக்கில் facebook.com/cricketicc. டுவிட்டரில் @cricketicc.

டுவென்டி20 உலக கோப்பை குறித்த வெப்சைட் முகவரி: iccworldtwenty20.com

English summary
The International Cricket Council launched the official event website for the World Twenty20 Championships.
கருத்தை எழுதுங்கள்