Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம்.. இங்கிலாந்து அணியி்ல் பீட்டர்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

Posted by:
Updated: Friday, September 14, 2012, 19:20 [IST]
 

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம்.. இங்கிலாந்து அணியி்ல் பீட்டர்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?
 

லண்டன்: இங்கிலாந்து மற்றும் வெல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் அதிருப்திக்கு உள்ளாகிய இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன், இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வர உள்ள இங்கிலாந்து அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. இதன் இறுதி முடிவு வரும் 18ம் தேதி தெரியவரும்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன். கடந்த மே மாதம் ஒருநாள் மற்றும் டுவென்டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். அப்போது டெஸ்ட் போட்டிகளில் அதிக கவனம் செலுத்தவும், குடும்பத்துடன் நேரம் செலவிடவும் விரும்பி ஓய்வு பெறுவதாக தெரிவித்தார்.

ஆனால் அதன்பிறகு தனது முடிவை மாற்றி கொண்ட பீட்டர்சன், இலங்கையில் வரும் 18ம் தேதி துவங்க உள்ள டுவென்டி20 உலக கோப்பை தொடரில் விளையாட விரும்புவதாக தெரிவித்தார். ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மறுத்துவிட்டது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான கிரிக்கெட் தொடரில் கலந்து கொண்ட போது, இங்கிலாந்து கேப்டன் மற்றும் பயிற்சியாளர் குறித்த அவதூறான செய்திகளை தென் ஆப்பிரிக்கா வீரர்களுக்கு பரப்பினார். இதில் அதிருப்தி அடைந்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், அவரை தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கியது. மேலும் பீட்டர்சனின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை இதோடு முடிவு பெறலாம் என்ற கருத்து எழுந்தது.

ஆனால் இந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இங்கிலாந்து அணியில் பீட்டர்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வர உள்ள உத்தேச வீரர்களின் பட்டியலை வெளியிட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தாமதப்படுத்தி வருகிறது. இங்கிலாந்து வீரர்களின் பட்டியலை வரும் 18ம் தேதி வெளியிட உள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியின் சிறந்த துவக்க வீரராக கெவின் பீட்டர்சன் செயல்பட்டு வருகிறார். எனவே அவரை அணியில் இருந்து நீக்கினால் அணிக்கு சிறப்பான துவக்கம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம். மேலும் கேப்டன் ஆன்ரூ ஸ்டிராஸ் ஓய்வு பெற்றுள்ள நிலையில், பீட்டர்சன் அணியில் சேர்க்கப்பட்டால் பிரச்சனை ஏற்படாது என்று நம்பப்படுகிறது. ஆனால் இறுதி முடிவு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் கையில் தான் உள்ளது.

Story first published:  Friday, September 14, 2012, 8:21 [IST]
English summary
Kevin Pietersen could resume his England career during the tour of India after the England and Wales Cricket Board confirmed that the planned squad announcement had been put back until Tuesday (September 18).
கருத்தை எழுதுங்கள்