Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டுவென்டி20 உலக கோப்பையை இந்தியா மீண்டும் வெல்லும்: இர்பான் நம்பிக்கை

Posted by:
Updated: Friday, September 14, 2012, 19:21 [IST]
 

டுவென்டி20 உலக கோப்பையை இந்தியா மீண்டும் வெல்லும்: இர்பான் நம்பிக்கை
 

கொழும்பு: இலங்கையில் நடைபெற உள்ள டுவென்டி20 உலக கோப்பையில் களமிறங்க உள்ள இந்திய அணி முழு பலத்துடன் இருப்பதால், உலக கோப்பை மீண்டும் வெல்ல வாய்ப்புள்ளது என்று இந்திய வேகப்பந்துவீச்சாளர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வரும் 18ம் தேதி முதல் டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் துவங்க உள்ளது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட மொத்தம் 12 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்திய அணி வரும் 19ம் தேதி தனது முதல் லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான களமிறங்க உள்ளது.

அதற்காக இந்திய வீரர்கள் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். லீக் போட்டிகளுக்கு முன்னதாக நாளை நடைபெற உள்ள பயிற்சி போட்டியில் இந்திய அணி, இலங்கையை எதிர்த்து ஆட உள்ளது.

இந்த நிலையில் இன்று பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வேகப்பந்துவீச்சாளர் இர்பான் பதான், சுரேஷ் ரெய்னா ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பேசிய இர்பான் பதான், டுவென்டி20 உலக கோப்பையை இந்திய அணி மீண்டும் வெல்ல வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்ற டுவென்டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. அப்போது இந்திய அணியில் இருந்த பல வீரர்கள், இந்த உலக கோப்பை தொடரிலும் விளையாட உள்ளனர். தற்போது சிறப்பான நிலையில் உள்ள இந்திய அணியில், வீரர்கள் உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.

உலக கோப்பைக்கு முன்னதாக நியூசிலாந்திற்கு எதிரான டுவென்டி20 போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும், அப்போட்டியில் சிறப்பாக விளையாடினோம்.

இந்திய அணியில் மீண்டும் யுவராஜ் சிங் இடம் பெற்றிருப்பது, வீரர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்திய அணியின் வெற்றிகளில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு. எனவே இந்த ஆண்டு டுவென்டி20 உலக கோப்பையை இந்திய அணி வெல்லும் என்று நம்புகிறேன் என்றார்.

இந்திய மிடில் ஆடர் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா கூறியதாவது,

எப்போது பேட்டிங் செய்ய நான் களமிறக்கப்படுவேன் என்பதை குறித்து யோசித்து வருகிறேன். ஏனெனில் டுவென்டி20 போட்டிகளில் முதல் 6 ஓவர்கள் மிகவும் முக்கியமானது. எனவே முதல் 6 ஓவர்களில் நான் களமிறங்க விரும்புகிறேன்.

ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் போன்ற அணிகளில் முதல் 6 ஓவர்களில் சிறப்பாக ஆட பேட்ஸ்மேன்கள் உள்ளனர். எனவே நானும் அதிரடியாக ஆட விரும்புறேன். ஆனால் அதே நேரத்தில் எனது இயற்கையான ஆட்டத்தையும் வெளிப்படுத்த விரும்புகிறேன் என்றார்.

Story first published:  Friday, September 14, 2012, 17:10 [IST]
English summary
Indian fast bowler Irfan Pathan said that, Indian team is quite confident and hopefully we will have a great world cup.
கருத்தை எழுதுங்கள்