Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ராசி பார்க்கிறது இந்திய அணி: டுவென்டி20 உலக கோப்பை தொடரில் பழைய சீருடையில் களமிறங்க திட்டம்

Posted by:
Updated: Friday, September 14, 2012, 10:51 [IST]
 

மும்பை: டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் களமிறங்க உள்ள இந்திய அணியின் சீருடையில் மாற்றம் எதுவும் இருக்காது என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால் கடந்த ஆண்டு உலக கோப்பை தொடரை வென்ற ராசியான சீருடையை இந்திய அணி, டுவென்டி20 உலக கோப்பையிலும் அணிய திட்டமிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு(2011) நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதில் இந்திய அணியின் நீலநிறத்திலான சீருடையை அணிந்து களமிறங்கினர்.

ராசி பார்க்கிறது இந்திய அணி: டுவென்டி20 உலக கோப்பை தொடரில் பழைய சீருடையில் களமிறங்க திட்டம்

இந்த நிலையில் வரும் 18ம் தேதி இலங்கையில் நடைபெற உள்ள டுவென்டி20 உலக கோப்பை தொடரில் மூவர்ணக் கொடியுடன் கூடிய புதிய சீருடை அணிய போவதாக அறிவிக்கப்பட்டது. அதற்காக நைக் நிறுவனம் வடிவமைத்த புதிய சீருடை, கடந்த மாதம்(ஆகஸ்ட்) 16ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் இந்திய வீரர்கள் டோணி, விராத் கோஹ்லி, யுவராஜ் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நீல நிறத்தினால் புதிய சீருடையில் இடதுபுறம் காவி, வெள்ளை, பச்சை நிறத்திலான தேசிய கொடி சேர்க்கப்பட்டிருந்தது. நடுவில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முத்திரையும், இதன் மேல் கடந்த 1983, 2007, 2011 ஆகிய ஆண்டுகளில் உலக கோப்பை வென்றதை குறிக்கும் வகையில் தங்க நிறத்தில் 3 நட்சத்திரங்களும் இருந்தன.

ஆனால் நியூசிலாந்திற்கு எதிரான டுவென்டி20 போட்டியில் இந்திய அணி பழைய சீருடையை அணிந்து களமிறங்கியது. இந்த நிலையில் கடந்த ஆண்டு உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற, ராசியான பழைய சீருடையிலேயே, டுவென்டி20 உலக கோப்பையிலும் இந்திய களமிறங்க முடிவு செய்துள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Story first published:  Friday, September 14, 2012, 10:49 [IST]
English summary
Thinking has changed in less than a month. BCCI has said that the Indian team will appear in the old jersey during the premier T20 tournament.
கருத்தை எழுதுங்கள்