Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஐசிசியின் ஒருநாள் போட்டிக்கான கனவு அணிக்கு டோணி கேப்டன்-கம்பிர், கோஹ்லிக்கு அணியில் வாய்ப்பு

Posted by:
Published: Saturday, September 15, 2012, 12:49 [IST]
 

ஐசிசியின் ஒருநாள் போட்டிக்கான கனவு அணிக்கு டோணி கேப்டன்-கம்பிர், கோஹ்லிக்கு அணியில் வாய்ப்பு
 

துபாய்: சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) இந்த ஆண்டிற்கான ஒருநாள் போட்டிக்கான கனவு அணிக்கு இந்திய வீரர் டோணி, கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்திய வீரர்களான விராத் கோஹ்லி, கம்பிர் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

ஐசிசி சார்பில் ஆண்டுதோறும் டெஸ்ட், ஒருநாள், டுவென்டி20 கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக ஆடும் வீரர்களை தேர்வு செய்து விருது வழங்குவது வழக்கம். மேலும் சர்வதேச அளவிலான சிறந்த பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் மற்றும் பீல்டர்களை கொண்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான கனவு அணி அறிவிக்கப்படும்.

இந்த ஆண்டிற்கான ஐசிசியின் டெஸ்ட் போட்டிகளுக்கான கனவு அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் இதில் இந்தியர்கள் யாரும் இடம் பெறவில்லை. இந்த நிலையில் நேற்று ஒருநாள் போட்டிகளுக்கான கனவு அணி அறிவிக்கப்பட்டது. முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் கிளைவ் லாயிட் தலைமையிலான 5 பேரை கொண்ட குழு, அணியை தேர்வு செய்தது.

ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான கனவு அணியை, ஐசிசி மூத்த நிர்வாகி டேவிட் ரிச்சார்ட்சன் நேற்று அறிவித்தார். இதில் 6 அணிகளை சேர்ந்த வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்தியாவை சேர்ந்த டோணி, விராத் கோஹ்லி, கம்பிர் ஆகிய 3 வீரர்களும், இலங்கையை சேர்ந்த சங்கக்காரா, மலிங்கா ஆகிய 2 பேரும் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் இங்கிலாந்தை சேர்ந்த அலஸ்டயர் குக், ஸ்டீவ் பின், பாகிஸ்தானை சேர்ந்த சயீது அஜ்மல், ஷாகித் அப்ரிதி, ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க், அணியின் 12வது வீரராக ஷேன் வாட்சன் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். தென் ஆப்பிரிக்காவின் தரப்பில் மோர்னி மார்கல் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளார். ஐசிசி ஒருநாள் போட்டிக்கான கனவு அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன் பொறுப்பு, இந்திய வீரர் டோணிக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஐசிசி மூத்த நிர்வாகி டேவிட் ரிச்சார்ட்சன் கூறியதாவது,

ஐசிசி அணி தேர்வு வரலாற்றிலேயே மிகவும் பலமான ஒருநாள் போட்டிக்கான அணி இதுவாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன். மொத்த 6 அணிகளை சேர்ந்த சிறந்த வீரர்களை கொண்டு அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அணியி்ல் உள்ள வீரர்கள் எந்த சூழ்நிலையிலும், எந்த மைதானத்திலும் சிறப்பாக ஆடும் திறமை கொண்டவர்கள் என்றார்.

English summary
India captain MS Dhoni has been chosen as the skipper of ICC ODI Team of the year, which was announced in Colombo on Friday evening. Gautam Gambhir and Virat Kohli are the two other Indians in the XI.
கருத்தை எழுதுங்கள்