Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டுவென்டி20 உலக கோப்பை இந்தியாவுக்கு கிடைக்கிறது கஷ்டம்: கபில்தேவ்

Posted by:
Published: Saturday, September 15, 2012, 16:14 [IST]
 

டுவென்டி20 உலக கோப்பை இந்தியாவுக்கு கிடைக்கிறது கஷ்டம்: கபில்தேவ்
 

டெல்லி: இலங்கையில் நடைபெற உள்ள டுவென்டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா கோப்பையை வெல்வது கடினம் என்று முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வரும் 18ம் தேதி முதல் டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் துவங்க உள்ளது. தற்போது லீக் போட்டிகளுக்கு முன்னதாக பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையி்ல் டுவென்டி20 உலக கோப்பையை இந்தியா கைப்பற்றுவது கடினம் என்று முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

எனது மனமும், மூளையும் இரு வேறு கருத்துகளை கூறுகின்றன. உலக கோப்பையை இந்தியா கைப்பற்றும் என்று எனது மனது உறுதியாக கூறுகிறது. ஆனால் என்னுடைய கிரிக்கெட் அறிவை கொண்ட மூளை, உலக கோப்பையை இந்தியா கைப்பற்றுவது கடினம் என்று கூறுகிறது.

ஏனெனில் உலக கோப்பை போன்ற ஒரு பெரிய கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் முன், நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆடி இந்தியா தோல்வியை தழுவியுள்ளது. இது ஒரு நல்ல அறிகுறி அல்ல.

இந்திய அணி எளிதாக வெற்றி பெறும் வாய்ப்புகளை இழந்துள்ளது. இது போன்ற வாய்ப்புகள் மீண்டும் கிடைப்பது அரிது. அடுத்தடுத்து போட்டிகளில் ஒரு அணி தோல்வி அடைந்தால், வீரர்களின் தன்னம்பி்க்கை குறைந்துவிடும். எனவே உலக கோப்பையின் லீக் போட்டிகளில் இருந்தே சிறப்பான துவக்கம் கிடைத்தால் மட்டுமே, இந்திய அணி கோப்பை வெல்லுமா என்பதை குறித்து யோசிக்க முடியும்.

இந்திய அணிக்கு பேட்டிங் தான் பக்கபலமாக உள்ளது. மற்ற சர்வதேச கிரிக்கெட் அணிகளில் 1 அல்லது 2 மேட்ச் வின்னிங் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஆனால் இந்தியா அணியில் உள்ள 5 முதல் 6 பேட்ஸ்மேன்கள் போட்டியின் போக்கை மாற்றி வெற்றி பெற்று தரும் திறமை கொண்டவர்கள். எனவே தோல்விகளை தவிர்க்க இந்திய அணி முயற்சி செய்ய வேண்டும்.

English summary
Former India skipper Kapil Dev feels Team India would find it difficult to win the World T20 this year in Sri Lanka especially after struggling against New Zealand in the T20 international at Chennai.
கருத்தை எழுதுங்கள்