Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

பயிற்சி போட்டியில் கம்பிர் காயம்- டுவென்டி20 உலக கோப்பையில் பங்கேற்பாரா?

Posted by:
Published: Saturday, September 15, 2012, 15:47 [IST]
 

பயிற்சி போட்டியில் கம்பிர் காயம்- டுவென்டி20 உலக கோப்பையில் பங்கேற்பாரா?
 

கொழும்பு: டுவென்டி20 உலக கோப்பை தொடரின் பயிற்சி போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரரான கம்பிர் காயமடைந்து உள்ளார். இதனால் அவர் அடுத்து வரும் உலக கோப்பையின் லீக் போட்டிகளில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 18ம் தேதி முதல் இலங்கையில் துவங்க உள்ளது. இதற்கு முன்னதாக தற்போது பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பயிற்சி போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் பங்கேற்றன.

இப்போட்டில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்திய துவக்க வீரர் கம்பிர் அதிரடியாக ஒரு பவுண்டரி அடித்து தனது ரன் கணக்கை துவக்கினார். ஆனால் அதன்பிறகு இலங்கை வேகப்பந்துவீச்சாளர் மலிங்கா வீசிய பந்தை எதிர்கொள்ள முயன்ற கம்பிருக்கு, கை மணிக்கட்டில் பந்து பட்டு காயமடைந்தார்.

வலி தாங்க முடியாமல் தவித்த கம்பிருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது. அதன்பிறகு பேட்டிங் செய்ய முடியாமல் ஓய்வு எடுத்து கொண்டார். இந்த நிலையில் மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்திற்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் காயத்திற்காக ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

கம்பிருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, டுவென்டி20 உலக கோப்பை தொடரின் லீக் மற்றும் அடுத்து வரும் சுற்று போட்டிகளில் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கம்பிர் அடுத்து வரும் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலையில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

English summary
India's Gautam Gambhir injured his wrist during the first warm-up match against Sri Lanka at P Sara Oval on Saturday.
கருத்தை எழுதுங்கள்