Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஐ.பி.எல். புதிய அணி ஒன்றை உருவாக்குவதில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தீவிரம்

Posted by:
Published: Sunday, September 16, 2012, 15:33 [IST]
 

ஐ.பி.எல். புதிய அணி ஒன்றை உருவாக்குவதில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தீவிரம்
 

சென்னை: ஐ.பி.எல். போட்டிகளுக்கான புதிய அணி ஒன்றை உருவாக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டிருக்கிறது.

தற்போது டெக்கான் சார்ஜர்ஸ் அணியை நீக்கி வைத்திருக்கிறது கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். ஆனால் நீதிமன்றத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் உரிமையாளரான டெக்கான் கிரானிக்கள் ஹோல்டிங்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருக்கிறது.

இருப்பினும் புதிய அணி ஒன்றை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளில் இந்திய கட்டுப்பாட்டு வாரியம் ஈடுபட்டு வருகிறது. ஒருவேளை வழக்கில் டெக்கான் அணி வென்றாலும் கூட ஏற்கெனவே கொச்சி அணிக்கு மாற்றாக ஒரு அணி உருவாக்கப்பட வேண்டியிருப்பதால் புதிய அணி அவசியம் என்கிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.

புதிய அணியின் அடிப்படை விலை ரூ300 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு ஐபிஎல் அணிக்கான உரிமைக் காலம் 5 ஆண்டுகள் என்பதால் ஆண்டுக்கு ரூ60 கோடி என்ற அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த நிறுவனம் நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட கூடுதலாகக் கோருகிறதோ அது உரிமையாளராக இருக்கும்.

அகமதாபாத், விசாகப்பட்டினம், தர்மசாலா, இந்தூர், ஜாம்ஷெட்பூர், நாக்பூர், கட்டாக், கான்பூர், ராஜ்கோட், ராஞ்சி ஆகிய 10 நகரங்களை மையமாகக் கொண்டு அணி தேர்ந்தெடுக்கப்படுகிறது.

English summary
After terminating Deccan Chargers' contract on Friday night, IPL's governing council decided on Saturday to float tender for a new IPL team and short-listed 10 cities - Ahmedabad, Visakhapatnam, Dharamsala, Indore, Jamshedpur, Nagpur, Cuttack, Kanpur (Greater Noida), Rajkot and Ranchi. The new IPL team could be based out of any of these cities.
கருத்தை எழுதுங்கள்