Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஐசிசி விருது: சிறந்த ஒருநாள் ஆட்ட வீரராக விராத் கோஹ்லிக்கு விருது

Posted by:
Published: Sunday, September 16, 2012, 12:15 [IST]
 

ஐசிசி விருது: சிறந்த ஒருநாள் ஆட்ட வீரராக விராத் கோஹ்லிக்கு விருது
 

கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விருது வழங்கும் நிகழ்ச்சியில் இந்தியாவின் விராத் கோஹ்லி சிறந்த ஒருநாள் ஆட்ட வீரராக சிறப்பிக்கப்பட்டார்.

கடந்த ஆண்டில் 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய விராத் கோஹ்லி மொத்தம் 1733 ரன்கள் குவித்து ஐசிசி விருதைப் பெற்றிருக்கிறார். விராத் கோஹ்லிக்கி இலங்கையின் முன்னாள் வீரர் அரவிந்த் டி சில்வா விருதை வழங்க்னார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் சுனில் நரைன், சிறந்த இளம் வீரருக்கான விருதைப் பெற்றார்.

தென்னாப்பிரிக்காவின் ரிச்சார்ட் லெவிக்கு 20 ஓவர் போட்டிகளில் சிறந்த வீரருக்கான விருது கிடைத்தது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 45 பந்துகளில் சதமடித்தவர் லெவி.

ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருது, நியூசிலாந்தின் வெட்டோரிக்கு கிடைத்தது.

சங்ககராவுக்கு 3 விருதுகள்

இலங்கையின் சங்ககராவுக்கு ஐசிசியின் 3 விருதுகள் கிடைத்தன. ஆண்டின் சிறந்த வீரர், சிறந்த டெஸ்ட் போட்டி வீரர், மக்களின் தேர்வு ஆகிய பிரிவுகளில் சங்ககரா விருது பெற்றார். சங்ககராவுக்கு ப்ரையன் லாரா விருதை வழங்கினார்.

English summary
Indias Virat Kohli was on Saturday rewarded for his dream run in the last 12 months as he was named the ODI Cricketer of the Year, while Kumar Sangakkara walked away with three honours, including the Cricketer of the Year, in the ICC annual awards function here.
கருத்தை எழுதுங்கள்