Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

சச்சினை ஓய்வு பெற சொல்லி கட்டாயப்படுத்தாதீங்க!-பிரையன் லாரா

Posted by:
Published: Monday, September 17, 2012, 16:07 [IST]
 

சச்சினை ஓய்வு பெற சொல்லி கட்டாயப்படுத்தாதீங்க!-பிரையன் லாரா
 

கொழும்பு: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சச்சினை ஓய்வு பெற கூறி கட்டாயப்படுத்த கூடாது என்று முன்னாள் மேற்கிந்திய தீவுகள் வீரர் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர்(39). கடந்த 23 ஆண்டுகளாக இந்திய அணியில் ஆடி வரும் சச்சின், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். ஆனால் சமீபகாலமாக இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முன்னாள் மேற்கிந்திய தீவுகள் பேட்ஸ்மேன் பிரையன் லாரா, சச்சினுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இலங்கை தலைநகர் கொழும்புவி்ல் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின்(ஐசிசி) விருது வழங்கும் விழா பிரையன் லாரா கலந்து கொண்டார்.

விழாவில் பேசிய பிரையன் லாரா கூறியதாவது,

நான் சொல்லும் கருத்து முற்றிலும் சரியா? என்று தெரியவில்லை. டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆட வேண்டும் என்பதற்காக, சச்சின் குறுகிய கால அளவு (ஒருநாள் மற்றும் டுவென்டி20 போட்டிகள்) போட்டிகளில் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார்.

எனவே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது சச்சினுக்கு தெளிவாக தெரியும். கிரிக்கெட் உலகிற்கு மட்டுமின்றி இந்திய கிரிக்கெட் அணிக்கும் சச்சின் ஒரு சொத்து. எனவே ஓய்வு முடிவை குறித்து அவரே தான் தீர்மானிக்க வேண்டும். அவர் சரியான முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன்.

கிரிக்கெட் ஆடுகளத்திலும், வெளியேயும் அவர் மீது உயர்ந்த மதிப்பு வைத்துள்ளேன். சச்சினை போன்ற ஒரு வீரரை, சாதாரணமாக வெளியே அனுப்ப கூடாது. எனவே அவர் ஆட விரும்பும் வரை, அனுமதிக்க வேண்டும். ஓய்வு பெறுமாறு யாரும் அவரை வற்புறுத்த கூடாது என்றார்.

English summary
Former West Indies dashing left hander Brian Lara supports Indian maestro Sachin. He said that, I believe Sachin would know when is the right time to retire.
கருத்தை எழுதுங்கள்