Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டுவென்டி20 உலக கோப்பை: லீக் போட்டிகளில் இருந்தே இந்தியா சிறப்பாக ஆடும்: ரோஹித் சர்மா

Posted by:
Published: Tuesday, September 18, 2012, 16:28 [IST]
 

டுவென்டி20 உலக கோப்பை: லீக் போட்டிகளில் இருந்தே இந்தியா சிறப்பாக ஆடும்: ரோஹித் சர்மா
 

கொழும்பு: பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில், டுவென்டி20 உலக கோப்பை தொடரின் லீக் போட்டியில் இருந்து இந்திய அணி சிறப்பாக ஆடும் என்று இந்திய மிடில் ஆடர் பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் துவங்குகிறது. இன்றைய முதல் லீக் போட்டியில் இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. நாளை நடைபெற உள்ள லீக் போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன. லீக் போட்டிகளுக்கு முன்னதாக 2 பயிற்சி போட்டிகளில் இந்திய அணி கலந்து கொண்டது.

இதில் இலங்கைக்கு எதிரான முதல் பயிற்சி போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா, 2வது பயிற்சி போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் டுவென்டி20 உலக கோப்பை தொடரின் லீக் போட்டிகளில் இருந்து, இந்திய அணி சிறப்பாக செயல்படும் என்று மிடில் ஆடர் பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

டுவென்டி20 உலக கோப்பை தொடரின் லீக் போட்டிகளில் இருந்தே இந்திய அணி சிறப்பாக ஆடும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். பாகிஸ்தான் அணிக்கு எதிரான தோல்வி என்பது இந்திய அணி கடந்து வந்து மோசமான நாட்களில் ஒன்றாக கருதலாம். ஆனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் லீக் போட்டியில் சிறப்பாக ஆடுவோம்.

சில நேரங்களில் நாம் நினைப்பது போல நடப்பதில்லை. 186 ரன்கள் என்பது இலங்கை ஆடுகளங்களில் ஒரு சிறந்த ஸ்கோர் என்பதை மறுக்க முடியாது. மேலும் சுழல்பந்துவீச்சிற்கும் ஆடுகளம் ஒத்துழைப்பு கொடுத்தது. ஆனால் சில நேரங்களில் வெற்றி நமக்கு கிடைப்பதில்லை.

கிரிக்கெட் போட்டிகளை பொறுத்த வரை சிறப்பான துவக்கம் கிடைக்க வேண்டும். பாகிஸ்தான் அணியினர் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. மேலும் பாகிஸ்தான் அதிக அனுபவம் மிகுந்த அணியாக உள்ளது.

இலங்கை சுற்றுப்பயணம் எனக்கு ஏமாற்றத்தை அளித்தது. எனவே பேட்டிங் மற்றும் உடற்தகுதியில் முன்னேற்றம் காண கடும் பயிற்சியில் ஈடுபட்டேன். தற்போது அதன் பலனை அடைந்து வருகிறேன். உலக கோப்பை தொடரின் பயிற்சி போட்டிகள் மட்டுமே முடிந்துள்ளது. எனவே லீக் சுற்று போட்டிகளில் இருந்து தொடர்ந்து சிறப்பாக ஆட வேண்டியுள்ளது.

என்னை பொறுத்த வரை பார்மில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கடும் உழைப்பை என்றும் கைவிட கூடாது. தொடர்ந்து கடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தால், அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும். இந்திய அணியில் எனக்கு அளிக்கப்பட்டுள்ள பணியை சிறப்பாக செய்ய முயற்சி செய்வேன் என்றார்.

English summary
Middle-order batsman Rohit Sharma expressed confidence that India would bounce back from the five-wicket loss to Pakistan in their last warm-up game ahead of the World Twenty20, and said the team will get better as the tournament progresses.
கருத்தை எழுதுங்கள்