Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டுவென்டி20 உலக கோப்பை தொடர் இன்று துவக்கம்: முதல் போட்டியில் இலங்கை-ஜிம்பாப்வே மோதல்

Posted by:
Updated: Tuesday, September 18, 2012, 11:18 [IST]
 

கொழும்பு: கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து கொண்டிருந்த டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று இலங்கையில் தொடங்குகிறது. இன்றைய முதல் லீக் போட்டியில் ஜிம்பாப்வே, இலங்கை அணிகள் மோத உள்ளன.

டுவென்டி20 உலக கோப்பை தொடர் இன்று துவக்கம்: முதல் போட்டியில் இலங்கை-ஜிம்பாப்வே மோதல்
கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த 4வது டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் இலங்கையில் துவங்குகிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, வங்கதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து, அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், தென் ஆப்பிரிக்கா உட்பட மொத்தம் 12 அணிகள் பங்கேற்க உள்ளன.

தொடரில் பங்கேற்க உள்ள 12 அணிகளும் தலா 3 அணிகள் வீதம் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஏ பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து அணிகளும், சி பிரிவில் இலங்கை, தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகளும், டி பிரிவில் பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

லீக் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள், சூப்பர் 8 சுற்றிற்கு முன்னேறும். சூப்பர் 8 சுற்றில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறும். உலக கோப்பை தொடரின் இறுதி போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 7ம் தேதி நடைபெற உள்ளது. லீக் சுற்று முதல் இறுதிப்போட்டி வரை மொத்தம் 27 போட்டிகள் நடைபெற உள்ளது.

இன்றைய போட்டி:

இன்று நடைபெற உள்ள முதல் லீக் போட்டியில் சி பிரிவை சேர்ந்த இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் மோத உள்ளன. ஹம்பன்டோட்டாவில் நடைபெற உள்ள இப்போட்டி இரவு 7.30 மணிக்கு துவங்கும். சொந்த மண்ணில் அதிக பலம் கொண்ட அணியாக உள்ள இலங்கை இன்றைய போட்டியில் வெற்றி பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அணியை பொறுத்த வரை நீண்ட பேட்ஸ்மேன்களின் வரிசையை கொண்டுள்ளது. கேப்டன் ஜெயவர்த்தனே, சங்கக்காரா, தில்ஷன், சன்டிமால், திரிமன்னே, ஆஞ்சிலோ மேத்யூஸ், பெரேரா ஆகியோர் உள்ளனர். பந்துவீச்சில் மலிங்கா, குலசேகரா, மென்டிஸ் ஆகியோர் பக்கபலமாக உள்ளனர்.

ஜிம்பாப்வே அணியை பொறுத்த வரை கேப்டன் பிரன்டன் டெய்லர், சிகும்புரா, பிரையன் விடோரி, ராய் பிரைஸ் ஆகியோர் பொறுப்பாக ஆட வேண்டியுள்ளது. சமீபகாலமாக சர்வதேச போட்டிகளில் ஜொலிக்க தவறி வரும் ஜிம்பாப்வே மீண்டும் எழுச்சி பெற இந்த டுவென்டி20 உலக கோப்பை தொடர் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published:  Tuesday, September 18, 2012, 11:17 [IST]
English summary
Today is the beginning of the fourth edition of ICC World Twenty20 in Sri Lanka. Sri Lanka and Zimbabwe will open the tournament on Today in a night game in Hambantota.
கருத்தை எழுதுங்கள்