Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டுவென்டி20 உலக கோப்பையை இந்தியா மீண்டும் வெல்லுமா?

Posted by:
Published: Tuesday, September 18, 2012, 15:10 [IST]
 

டுவென்டி20 உலக கோப்பையை இந்தியா மீண்டும் வெல்லுமா?
 

கொழும்பு: இலங்கையில் இன்று துவங்கும் டுவென்டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணி, உலக கோப்பையை வெல்ல பலமுள்ள அணியாக உருவாக வேண்டியுள்ளது. இதற்கு சிறந்த பேட்டிங் வரிசையை கொண்டுள்ள இந்திய அணி, பீல்டிங்கிலும் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று இலங்கையில் துவங்குகிறது. இதில் இந்தியா, இலங்கை, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. அந்த அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் பங்கேற்க உள்ளன.

இதில் ஏ பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன. லீக் சுற்றில் 3 அணிகளும் மற்ற அணியுடன் ஒரு முறை மோத உள்ளன. இதில் இந்திய அணி கடந்த 2007ம் ஆண்டு உலக கோப்பையை ஏற்கனவே வென்றுள்ளது. அதேபோல இங்கிலாந்து அணி நடப்பு சாம்பியனாக களமிறங்குகிறது. ஆனால் ஆப்கானிஸ்தான் அணி அனுபவமற்ற கத்துக்குட்டியாக களமிறங்குகிறது.

லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 என்ற அடுத்த சுற்றிற்கு முன்னேறும். ஏ பிரிவை பொறுத்த வரை பலவீனமான ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா, இங்கிலாந்து அணிகள் அடுத்த சுற்றிற்கு முன்னேறிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் சூப்பர் 8 சுற்றிற்கு முன்னேறும் பட்டியலில் இங்கிலாந்து அணிக்கு(ஏ1) என்றும், இந்திய அணி(ஏ2) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான்(க்யூ2) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் லீக் சுற்றில் ஆப்கானிஸ்தான் அதிரடியாக ஆடி அடுத்த சுற்றிற்கு முன்னேறினால், இந்தியா அல்லது இங்கிலாந்து அணி க்யூ2 அணியாக தொடரில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளது.

இந்திய அணியை பொறுத்த வரை நாளை ஏ பிரிவில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து மோத உள்ளது. அதன்பிறகு வரும் 23ம் தேதி இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்த 2 போட்டிகளும் கொழும்பு மைதானத்தில் தான் நடைபெற உள்ளன.

இந்திய அணியை பொறுத்த வரை லீக் சுற்றை எளிதாக கடந்தாலும், சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தான், நியூசிலாந்து போன்ற பலமான அணியை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். லீக் சுற்றில் ஒரு போட்டியில் தோல்வியுற்றாலும் இந்திய அணிக்கு அதிக பாதிப்பு இல்லை. ஆனால் அடுத்தடுத்து சுற்றுகளின் பங்கேற்கும் எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணிக்கு இறுதி போட்டி வரை முன்னேற முடியும்.

மேலும் ரன் ரேட் வைத்து அணிகள் சூப்பர் 8 சுற்றில் தகுதி பெறலாம் என்பதால், ஒவ்வொரு போட்டியிலும் அதிக ரன் ரேட் உடன் வெற்றி பெற வேண்டிய நிலை உள்ளது.

இந்திய அணியின் பலம்:

இந்திய அணியில் பேட்டிங் வரிசை சிறப்பாக உள்ளது. ஷேவாக், யுவராஜ் சிங், விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, டோணி ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்யும் திறன் கொண்டவர்கள். மேலும் கடந்த 2007ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த பல வீரர்களும், இந்த ஆண்டு உலக கோப்பையில் ஆட உள்ளது அணியின் வெற்றியை எளிதாக்க வாய்ப்புள்ளது.

பந்துவீச்சை பொறுத்தவரை அஸ்வின் தனது திறமையை நிரூபித்துள்ளார். அவருடன் அனுபவ வீரர் ஹர்பஜனும் இணையும் பட்சத்தில் இந்திய அணிக்கு சிறந்த சுழல்பந்துவீச்சு ஜோடி கிடைத்துள்ளது.

பலவீனம்:

ஆனால் இந்திய பந்துவீச்சில் எதிர்பார்க்கும் அளவிற்கு முன்னேற்றம் இல்லை. மேலும் பீல்டிங்கில் வீரர்கள் ரன்களை கோட்டை விடுவதால், எதிரணியினர் எளிதாக ரன்களை சேர்த்துவிடுகின்றனர். இதை இந்திய அணி தவிர்க்க வேண்டும்.

டுவென்டி20 உலக கோப்பை தொடரில் தென்ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற பலமான அணிகள் களமிறங்க உள்ள நிலையில், இந்திய அணியின் பலவீனங்களை நீக்கி, பலம் கொண்ட அணியாக களமிறங்கினால் மட்டுமே உலக கோப்பை கைப்பற்ற முடியும்.

English summary
ICC World Twenty20 2012's Group A has two former champions in India and England. MS Dhoni and his men won the inaugural edition of World T20 in South Africa in 2007 while England, under Paul Collingwood tasted their first ever global success in 2010 in the Caribbean. Indian team had good batting line up. But they are losing runs by bad fielding. So Indian team should improve the fielding.
கருத்தை எழுதுங்கள்