Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இந்திய சுற்றுப்பயணம்: இங்கிலாந்து டெஸ்ட் அணியில் பீட்டர்சனுக்கு வாய்ப்பு மறுப்பு!

Posted by:
Published: Wednesday, September 19, 2012, 11:25 [IST]
 

இந்திய சுற்றுப்பயணம்: இங்கிலாந்து டெஸ்ட் அணியில் பீட்டர்சனுக்கு வாய்ப்பு மறுப்பு!
 

லண்டன்: இந்தியாவிற்கு வரும் நவம்பர் மாதம் சுற்றுப்பயணம் வரவுள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கான அணியி்ல் அதிரடி பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சனுக்கு வாய்ப்பு வழங்கபடவில்லை.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அப்போது இந்தியாவிற்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 2 டுவென்டி20 போட்டிகள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆகியவற்றில் பங்கேற்க உள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 15ம் தேதி துவங்க உள்ளது. இந்த நிலையில் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ள இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் போது, முன்னாள் இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ் மற்றும் அணியின் பயிற்சியாளர் ஆன்டி பிளவருக்கு எதிராக தவறான கருத்துகள் அடங்கிய செய்திகளை தென் ஆப்பிரிக்கா வீரர்களுக்கு பீட்டர்சன் அனுப்பினார். இதில் அதிருப்தி அடைந்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து பீட்டர்சனை நீக்கியது.

இதனால் பீட்டர்சனின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவடைந்தது என்ற செய்திகள் பரவியது. இந்த நிலையில் தனது செயலுக்கு பீட்டர்சன் மன்னிப்பு கேட்டார். ஆனால் அதில் ஆறுதலடையாத இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் பீட்டர்சனை சேர்க்காமல் விட்டுள்ளது என்று தெரிகிறது.

கெவின் பீட்டர்சன் இல்லாத நிலையில் ஜோ ரூட், நிக் காம்ப்டன் ஆகியோருக்கு இங்கிலாந்து அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியின் வீரர்கள் விபரம்:

அலஸ்டயர் குக் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ, இயான் பெல், டிம் பிரிஸ்னன், ஸ்டூவர்ட் பிராட், நிக் காம்ப்டன், ஸ்டீவன் பின், கிரஹாம் ஆனியன்ஸ், இயான் மோர்கன், மான்டி பனேசர், சமித் பட்டேல், மேத் பிரையர், ஜோ ரூட், ஸ்வான், ஜோனதன் டிராட்.

English summary
England and Wales Cricket Board continue to ignore Kevin Pietersen as he has not been picked for India tour, while Joe Root and Nick Compton have been included in the Test squad.
கருத்தை எழுதுங்கள்