Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டுவென்டி20 போட்டிகளில் பங்கேற்க யுவராஜ் சிங் முழு உடல்திறனுடன் உள்ளார்: டோணி

Posted by:
Published: Wednesday, September 19, 2012, 12:54 [IST]
 

டுவென்டி20 போட்டிகளில் பங்கேற்க யுவராஜ் சிங் முழு உடல்திறனுடன் உள்ளார்: டோணி
 

கொழும்பு: டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் இந்தியா களமிறங்க உள்ளது. இதற்காக கடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்த இந்திய வீரர் யுவராஜ் சிங், தற்போது முழு உடல்திறனுடன் செயல்படுவதாக இந்திய கேப்டன் டோணி தெரிவித்தார்.

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற உள்ள லீக் போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளது. இதற்காக நேற்று இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது கேப்டன் டோணி, கம்பிர், சுரேஷ் ரெய்னா, பாலாஜி ஆகியோர் வலை பயிற்சியில் ஈடுபட்டனர். யுவராஜ் சிங் பேட்டிங் மற்றும் பீல்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். 75 நிமிடங்களில் 200க்கும் மேற்பட்ட பந்துகளை சந்தித்த யுவராஜ் சிங், பல அதிரடி ஷாட்களை அடித்தார். யுவராஜ் சிங் ஆர்வமாக பயிற்சியில் ஈடுபட்டதை கண்ட கேப்டன் டோணி, அவர் முழு உடல்திறனுடன் செயல்படுவதாக தெரிவித்தார்.

இது குறித்து கேப்டன் டோணி கூறியதாவது,

யுவராஜ் சிங் தற்போது தனது பேட்டிங் திறமையை பலப்படுத்தி வருகிறார். இது அவருக்கு ஒரு போராட்டம் போன்ற அனுபவமாகும். கடந்த காலத்தின் தோல்விகளை குறித்து யோசிக்காத ஒருவருக்கு, வளமான எதிர்காலம் காத்திருக்கிறது என்று நான் நம்புகிறேன். தனது உடல்திறனை அதிகரிக்க யுவராஜ் சிங் ஒவ்வொரு நாளும் தனது போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.

டுவென்டி20 போட்டிகளில் கலந்து கொள்ள யுவராஜ் சிங் முழு உடல்திறனுடன் உள்ளார். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க அவர், இன்னும் 100 சதவீத உடல்திறன் பெறவில்லை. ஆனால் விரைவில் டெஸ்ட் போட்டிகளுக்கும் அவர் தயாராகிவிடுவார் என்று நம்புகிறேன் என்றார்.

English summary
Indian captain Dhoni said that, Yuvraj Singh is shaping up really well. Yuvraj has looked fit for T20 format game. Obviously, he is still not 100 percent as far as Tests are concerned.
கருத்தை எழுதுங்கள்