Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டுவென்டி20 உலக கோப்பையில் யுவராஜ் சிங்கின் ஆட்டம் அதிகம் கவனிக்கப்படும்: வாசிம் அக்ரம்

Posted by:
Published: Thursday, September 20, 2012, 8:09 [IST]
 

டுவென்டி20 உலக கோப்பையில் யுவராஜ் சிங்கின் ஆட்டம் அதிகம் கவனிக்கப்படும்: வாசிம் அக்ரம்
 

கொழும்பு: டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டியில் யுவராஜ் சிங்கின் ஆட்டத்தை ரசிகர்கள் அதிகம் கவனித்து பார்ப்பார்கள் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற உள்ள லீக் போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்த நிலையில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளில், யுவராஜ் சிங்கின் ஆட்டம் ரசிகர்களால் அதிக கவனிக்கப்படும் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

டுவென்டி20 உலக கோப்பை தொடரில் இந்திய வீரர் ஜாகிர்கான் தனது முழுதிறனையும் வெளிப்படுத்தி ஆட வேண்டும். ஏனெனில் இந்திய அணியின் பந்துவீச்சு தாக்குதலை ஜாகிர்கான் தான் துவக்கி வைக்க வேண்டியுள்ளது. இந்திய அணியில் உள்ள மூத்த வீரர்களான ஜாகிர்கான், ஹர்பஜன் சிங், இர்பான் பதான் ஆகியோரின் ஆட்டத்தை பார்த்து கேப்டன் டோணி வருத்தப்படுகிறார் என்று நினைக்கிறேன்.

பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி போட்டியில் தோல்வி அடைந்ததால், டோணியின் அணி திட்டத்தில் மாற்றம் செய்யப்படலாம். டுவென்டி20 போட்டிகளை பொறுத்த வரை இந்திய அணியி்ல் நிறைய ஆல் ரவுண்டர்கள் உள்ளனர். எனவே 4 பந்துவீச்சாளர்களையும், 7 பேட்ஸ்மேன்களையும் தேர்வு செய்ய வேண்டிய காட்டாயம் இல்லை. மேலும் ஷேவாக், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், கோஹ்லி ஆகியோர் சிறப்பாக பந்துவீசும் தன்மை கொண்டவர்கள். இதுவே இந்திய அணிக்கு பக்கபலமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

யுவராஜ் சிங்கை மீண்டும் ஆடுகளத்தில் பார்க்க முடிந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்தேன். சென்னையில் நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் அவர் அதிரடியாக 34 ரன்களை எடுத்ததை கண்டு வியந்தேன். ஆனால் அவரது 'டைமிங்' இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும்.

கடவுளின் ஆசினால் அவர் மீண்டும் சர்வதேச போட்டிகளில் களமிறங்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இலங்கை டுவென்டி20 தொடரில் இந்தியா பங்கேற்கும் போட்டிகளில் யுவராஜ் சிங்கின் ஆட்டத்தை தான் ரசிகர்கள் கவனிப்பார்கள் என்றார்.

English summary
Former Pakistan captain Wasim Akram feels that, The fact Yuvraj Singh is back to international cricket is only due to the almighty's blessings and I am sure everyone's going to watch him closely in Sri Lanka.
கருத்தை எழுதுங்கள்