Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இந்திய அணியின் ஆட்டத்தில் இன்னும் முன்னேற்றம் தேவை: டோணி

Posted by:
Published: Thursday, September 20, 2012, 16:18 [IST]
 

இந்திய அணியின் ஆட்டத்தில் இன்னும் முன்னேற்றம் தேவை: டோணி
 

கொழும்பு: டுவென்டி20 உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றி பெற்றாலும், இந்திய அணியின் ஆட்டத்தில் இன்னும் முன்னேற்றம் தேவை என்று இந்திய கேப்டன் டோணி தெரிவித்துள்ளார்.

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்தியா 23 ரன்களில் வெற்றி பெற்றது. ஆனால் கிரிக்கெட்டில் கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தான் சிறப்பாக பந்துவீசி, இந்திய துவக்க வீரர்களை முதல் 5 ஓவர்களில் வெளியேற்றியது. மேலும் ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சில் ரன்களை சேர்க்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர்.

இதில் அதிருப்தியடைந்துள்ள கேப்டன் டோணி, இந்திய அணியின் ஆட்டத்தில் இன்னும் முன்னேற்றம் தேவை என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

டுவென்டி20 போட்டிகளை பொறுத்த வரை மோதும், இரு அணிகளுக்கு சமஅளவிலான வெற்றி வாய்ப்புள்ளது. ஒரு அணியில் உள்ள பேட்ஸ்மேன் அல்லது பந்துவீச்சாளருக்கு அதிஷ்டம் அடித்தால், போட்டியின் முடிவு கூட மாறிவிடும். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா நன்றாக ஆடியது. ஆனால் சிறப்பாக ஆடவில்லை.

இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இன்னும் முன்னேற்றம் தேவை. அணியி்ல் 5 பந்துவீச்சாளர்கள் வைப்பது குறித்து பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் அணியில் உள்ள பகுதி நேர பந்துவீச்சாளர்களும், முழுநேர பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீச வேண்டியுள்ளது என்றார்.

English summary
Team India skipper MS Dhoni admitted that his team's performance was not that good against minnows Afghanistan, despite their 23-run win in the opening Group A clash at R Premadasa Stadium in Colombo.
கருத்தை எழுதுங்கள்