Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஐபிஎல் உட்பட உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுமையாக விடை பெற்றார் மேத்யூ ஹைடன்

Posted by:
Published: Thursday, September 20, 2012, 16:01 [IST]
 

ஐபிஎல் உட்பட உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுமையாக விடை பெற்றார் மேத்யூ ஹைடன்
 

சிட்னி: ஐபிஎல் உட்பட உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஆடி வந்த முன்னாள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மேத்யூ ஹைடன், கிரிக்கெட் போட்டிகளுக்கு முழுமையாக ஓய்வை அறிவித்துள்ளார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிரடி வீரர் ஹைடனின் ஆட்டத்தை இனி ரசிகர்கள் பார்க்க முடியாது.

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன்(40). ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரராக களமிறங்கி எதிரணியின் பந்துவீச்சை துவஷம் செய்து வந்த இவர், கடந்த 2008ம் ஆண்டுடன் சர்வதேச அளவிலான ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதேபோல 2009ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

அதன்பிறகு இந்திய உள்ளூர் டுவென்டி20 தொடரான ஐபிஎல்லில் கலந்து கொண்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரராக களமிறங்கிய இவருக்கு, சென்னை ரசிகர்கள் இடையே பலத்த வரவேற்பு இருந்தது. 'மங்கூஸ்' வகை பேட்டை அறிமுகப்படுத்திய இவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பல வெற்றிகளுக்கும் முக்கிய காரணமாக இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 2010ம் ஆண்டு ஐபிஎல் தொடருடன் மேத்யூ ஹைடனின் ஒப்பந்தம் முடிவடைந்தது. ஒரு வருட ஓய்விற்கு பிறகு ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக் டுவென்டி20 தொடரில் பிரிஸ்பெயின் ஹீட் அணிக்காக ஹைடன் ஆடினார். இந்த நிலையில் தற்போது தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு முழுமையாக ஓய்வை அறிவித்துள்ளார் மேத்யூ ஹைடன்.

இது குறித்து அவர் கூறியதாவது,

பிக் பாஸ் தொடரின் பிரிஸ்பெயின் ஹீட் அணியின் வளர்ச்சிக்காக நான் தொடர்ந்து செயலாற்ற உள்ளேன். ஆடுகளத்தின் உள்ளேயும், வெளியேயும் என்னால் முடிந்த உதவிகளை அணி வீரர்களுக்கு செய்வேன். அடுத்த தலைமுறையினருக்கு வாய்ப்பு கிடைக்கும் வகையில் நான் முழுமையாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இனி எனது குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிட முடியும் என்று நம்புகிறேன் என்றார்.

English summary
Australian great Matthew Hayden opting out of Australia's domestic Big Bash League, cricketing career on Thursday, according to a statement.
கருத்தை எழுதுங்கள்