Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டுவென்டி20 உலக கோப்பை: 5 தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு வைரஸ் தொற்று-இன்றைய வெற்றி பாதிக்கப்படுமா?

Posted by:
Published: Thursday, September 20, 2012, 16:45 [IST]
 

டுவென்டி20 உலக கோப்பை: 5 தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு வைரஸ் தொற்று-இன்றைய வெற்றி பாதிக்கப்படுமா?
 

ஹம்பந்தோட்டா: டுவென்டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க இலங்கைக்கு வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியி்ல் 5 வீரர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இன்றைய ஜிம்பாப்வே அணிக்கு எதிரான லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியின் வெற்றி பாதிக்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரவு 7.30 மணிக்கு துவங்க உள்ள லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் மோத உள்ளன. பலமிகுந்த அணியாக உள்ள தென் ஆப்பிரிக்க அணி இன்று எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தென் ஆப்பிரிக்க அணியில் உள்ள 5 வீரர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்த அணியின் மேலாளர் முஹம்மது மூசாஜீ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

தென் ஆப்பிரிக்க அணியில் உள்ள சில வீரர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் வாந்தி, வயிற்று போக்கு ஆகியவை ஏற்பட்டு வீரர்கள் அவதிப்பட்டனர். ஆனால் அவர்களின் உடல்நிலையில் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இதனால் இன்று நடைபெற உள்ள போட்டியில் முழுபலத்துடன் வீரர்கள் களமிறங்குவார்கள் என்று நம்புகிறேன்.

அணியில் உள்ள 15 வீரர்களும் ஆடுகளத்தில் ஆட முழு உடல்தகுதியுடன் இருப்பார்கள் என்று நம்புகிறேன். பந்துவீச்சாளர் ஆல்பி மார்கல் போட்டிக்கு முன்னதாக உடல்தகுதி சோதனைக்கு உட்படுத்தப்படுவார். நேற்று எடுத்த எம்.ஆர்.ஐ சோதனையில் அவரது உடல்தகுதியில் சந்தேகம் நீடிக்கிறது. எனவே அவர் இன்று களமிறங்குவார் என்று உறுதி அளிக்க முடியாது. ஆனால் மற்ற வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மற்ற 4 வீரர்களும் இன்று விளையாடுவார்கள் என்று நம்புகிறேன் என்றார்.

வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட 5 தென் ஆப்பிரிக்கா வீரர்களுக்கும் இன்று போட்டி துவங்கும் முன் உடல்தகுதி சோதனை நடத்தப்பட உள்ளது. இதில் முழுதிறனை நிரூபித்தால் மட்டுமே 5 வீரர்களும் களத்தில் ஆட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியின் வெற்றி மதில் நடக்கும் பூனை கதையாக உள்ளது.

English summary
South Africa, starting its World T20 campaign against Zimbabwe, is hopeful of playing its best players today, as five cricketers have have fallen ill, are expected to be fit for the day-night clash, according to a report.
கருத்தை எழுதுங்கள்