Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

போட்டிகளில் கடைசி கட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சு சரியில்லை: விராத் கோஹ்லி

Posted by:
Published: Friday, September 21, 2012, 15:24 [IST]
 

போட்டிகளில் கடைசி கட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சு சரியில்லை: விராத் கோஹ்லி
 

கொழும்பு: கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் பந்துவீச்சு துவக்கத்தில் சிறப்பாக உள்ளது. ஆனால் இறுதிக்கட்ட ஓவர்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் அதிக ரன்களை கொடுப்பது வருத்தம் அளிக்கிறது என்று இந்திய பேட்ஸ்மேன் விராத் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானை சந்தித்தது. இதில் இந்திய அணி 23 ரன்களில் வெற்றி பெற்றது. ஆனால் கிரிக்கெட் உலகில் கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தான், இந்திய அணியின் பந்துவீச்சை கடைசி ஓவர் வரை சமாளித்து ஆடியது. இதில் அதிருப்தியடைந்துள்ளார் இந்திய இளம் வீரர் விராத் கோஹ்லி.

இது குறித்து அவர் கூறியதாவது,

இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சின் மூலம் பல முக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளோம். போட்டிகளில் துவக்கத்தில் சிறப்பாக பந்துவீசும் இந்திய பந்துவீச்சாளர்கள், கடைசிக்கட்டத்தில் அதிக ரன்களை கொடுத்துவிடுகின்றனர். எனவே முக்கியத்துவம் வாய்ந்த கடைசிகட்டத்தில் சிறப்பாக பந்துவீச இந்திய வீரர்கள் முயற்சி செய்ய வேண்டும்.

அனுபவமுள்ள அணிகளுடன் விளையாடும் போது, ஆப்கானிஸ்தான் போன்ற கத்துக்குட்டி அணிகளுக்கு தோல்வி பயம் இருக்காது. ஆட்டத்தின் நிலைகளை குறித்து அவை கண்டுகொள்வதில்லை. இதனால் அனுபவமில்லாத அணியின் வீரர்கள் மனஅழுத்தம் இல்லாமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிகிறது. இங்கிலாந்து போன்ற அனுபவமுள்ள அணிகள், போட்டிகளில் திட்டமிட்டு களமிறங்குகின்றன.

டுவென்டி20 போட்டிகளை பொறுத்த வரை ஒரு போட்டியில் நமது முயற்சி தோல்வி அடைந்தால், சில போட்டிகளில் பங்கேற்றால் மட்டுமே நமது முழுமை திறமையை காட்ட முடியும். ஒருநாள் போட்டிகளில் துவக்கக்கட்டத்தில் 40 முதல் 45 ரன்கள் எடுத்தால் போதுமானது. ஆனால் டுவென்டி20 போட்டிகளில் துவக்க கட்டத்தில் 85 முதல் 90 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். இந்திய அணியின் துவக்க வீரர்கள் அனுபவ மிகுந்தவர்கள். எனவே இந்திய அணிக்கு அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பான துவக்கத்தை அளிப்பார்கள் என்று நம்புகிறேன் என்றார்.

English summary
Given quite a few anxious moments by minnows Afghanistan in their World Twenty20 opener in Colombo, India's in-form batsman Virat Kohli conceded that his side's bowling at the death overs is a "worrying factor".
கருத்தை எழுதுங்கள்