Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

நான் சிக்ஸ்களை அடிப்பது எப்படி தெரியுமா? -ரகசியத்தை வெளியிட்டார் கிறிஸ் கெய்ல்

Posted by:
Updated: Friday, September 21, 2012, 17:04 [IST]
 

கொழும்பு: கிரிக்கெட் போட்டிகளில் சிக்ஸ்களை அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தும் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல், தனது அதிரடி ஆட்டத்திற்கு உடல் சமநிலை தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

நான் சிக்ஸ்களை அடிப்பது எப்படி தெரியுமா? -ரகசியத்தை வெளியிட்டார் கிறிஸ் கெய்ல்
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல். இன்று தனது 33 பிறந்தநாளை கொண்டிய இவர், அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்றவர். அதிலும் இவரது இமாலய சிக்ஸ்களுக்கு, ரசிகர்கள் இடையே தனி மரியாதை உண்டு.

இந்த நிலையில் கிரிக்கெட் போட்டிகளில் சரியான உடல் சமநிலை கொண்ட எந்த வீரருக்கும், அதிரடியாக பேட்டிங் செய்வது எளிது என்று கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

ஒரு கிரிக்கெட் வீரரின் முக்கிய திறமையே அவரது உடல் சமநிலை தான். கிரிக்கெட் போட்டிகளில் அதிரடியாக ஆடி பல சிக்ஸ்களை அடிக்க வேண்டுமானால், சிறந்த உடல் சமநிலையை பெற்றிருக்க வேண்டும். உடல் சமநிலைக்காக நான் அதிக கவனம் செலுத்துகிறேன். பேட்ஸ்மேன்கள் எளிதாக ஆட பந்துவீச்சாளர்கள் எப்போதுமே அனுமதிப்பதில்லை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

மேலும் அதிரடியாக ஆட உடல் பலமும் தேவைப்படுகிறது. இந்த காலத்தில் சிக்ஸ் அடிப்பது என்பது ஒரு பெரிய காரியம் அல்ல, எல்லா வீரர்களும் சிக்ஸ் அடிக்கிறார்கள். முதலில் ஆடுகளத்தில் நிலைத்து விட்டால், அதன்பிறகு பந்துவீச்சாளர்களை எதிர்த்து அதிரடியாக ஆடவது எளிது.

ஒரு ஷாட்டை அடிக்கும் முன்பே, அதை நம்மால் அடிக்க முடியும் என்ற முழு நம்பிக்கை தேவை. எனவே கிரிக்கெட் போட்டிகளில் மன ரீதியாக முதலில் தயாராக வேண்டும்.

மேற்கிந்திய தீவுகள் அணியை பொறுத்த வரை, கடைசி பேட்ஸ்மேன் வரை பேட்டிங் செய்வர்கள். சுழல் மற்றும் வேகப்பந்து வீசி பந்துவீச்சாளர்கள் அணியில் உள்ளனர். டுவென்டி20 உலக கோப்பை தொடரில் நாங்கள் படிபடியாக முன்னேற முயன்று வருகிறோம். லீக் போட்டியை விட்டுவிட்டு, அடுத்த சுற்றை குறித்து யோசிக்க விரும்பவில்லை.

ஒரு போட்டியி்ல் களமிறங்கிய பிறகு தான், அதன் சுழலுக்கு தகுந்தாற்போல ஆட முடியும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் லீக் போட்டி எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்காக தன்னம்பிக்கையுடன் தயாராகி வருகிறோம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால், மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் பெரியளவில் கொண்டாட உள்ளோம் என்றார்.

Story first published:  Friday, September 21, 2012, 15:51 [IST]
English summary
The dangerous T20 batsman in the world, Chris Gayle, who is known for his huge hits to the stands has revealed the secret of hitting those huge sixes as he said that balance is the key for achieving perfection on the eve of West Indies' opening match against Australia at Premadasa Stadium.
கருத்தை எழுதுங்கள்